search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் 2, 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விழிப்புணர்வு பிரசாரம்
    X

    சென்னையில் 2, 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விழிப்புணர்வு பிரசாரம்

    • புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த அளவு எடை சிலிண்டர்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விற்பனை ஆகவில்லை.
    • பொது மக்களிடம் இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை:

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எடை குறைந்து நவீன சிலிண்டர்கள் கடந்த 2 வருடத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டன. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடிய 2 கிலோ எடையில் சிலிண்டர் பயன்பாட்டில் உள்ளது.

    இதுவரை வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 5 கிலோ எடை சிலிண்டர் மற்றும் 10 கிலோ எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது விநியோகம் செய்யப்படும் வழக்கமான இண்டேன் சிலிண்டரைவிட இது கூடுதல் வலுவானது. பாதுகாப்பானது. இந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடம் இருந்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த அளவு எடை சிலிண்டர்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விற்பனை ஆகவில்லை. இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான விழிப்புணர்வு வாகனத்தை கடந்த 5-ந் தேதி ஐ.ஓ.சி. நிறுவன தலைவர் எஸ்.எம். வைத்யா சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் மூலம் புறநகர் பகுதியில் உள்ள 25 விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பிரசார வாகனம் மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு வந்தது. அங்கு மாணவ-மாணவிகள், பொது மக்களுக்கு கியாஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது, கியாஸ் கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பிரசார வாகனம் சென்னை முழுவதும் சுற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    போரூர் செல்வி கியாஸ் ஏஜென்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் செல்வி கியாஸ் உரிமையாளர் குணசுந்தரி, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×