search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கேஸ் சிலிண்டர் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கேஸ் சிலிண்டர் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    • எடை குறைந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
    • விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்தது.

    காஞ்சிபுரம்:

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் புதிதாக எடை குறைந்த நவீன சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வகை சிலிண்டர்களில் முன்னா 2 கிலோ, சோட்டு 5 கிலோ, காம்போசிட் சிலிண்டர் 5 கிலோ, 10 கிலோ ஆகிய எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

    தற்போது விநியோகம் செய்யப்படும் வழக்கமான இண்டேன் சிலிண்டரைவிட இது கூடுதல் வலுவானது, பாதுகாப்பானது. இந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சிலிண்டர்கள் குறித்தும், வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடம் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வாகனத்தை கடந்த 5 தேதி இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 29 விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வாகனம் நேற்று மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்தது. அங்கு மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு கேஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது. காஸ் கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைக் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    15 நாட்கள் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×