search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுநகர்"

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி,தை, பங்குனி மாதங்களில் அதிக ளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அந்த ஆடுகள் பலியிட்டு சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.

    கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்த வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கோவில் வளாகத்தில் 20 விருந்து மண்டபங்கள் கட்டுவதற்கு 2020-21-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் ரூ.2 கோடியே 50 லட்சம் தொகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மதிப்பீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் கட்டுமான வேலைக்கான பணி ஆணை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் ரூ. 15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது.

    சிவகாசி

    பசுமை பட்டாசு தயாரிக்க உரிய அனுமதியை நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப அய்வு கழகம் (நீரி) அமைப்பிடம் பெற வேண்டும். சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை நிர்வாகங்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுவந்தனர்.

    இந்த நிலையில் அனுமதி பெறாத சில பட்டாசு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற வசதியாக சிவகாசியில் நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனாராயலு, விஞ்ஞானி சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது சிவகாசி அருகே உள்ள வெற்றி லையூரணியில் ரூ.15 கோடி செலவில் 5 ஏக்கரில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் மற்றும் செலவு தொகையில் ரூ.6 கோடியை பட்டாசு உற்பத்தி யாளர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த மையம் அமைக்க தேவைப்படும் நிதியில் ரூ.நான்கரை கோடியை சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையும், ரூ.நான்கரை கோடியை நீரி அமைப்பும் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் நீரி அமைப்பை சேர்ந்தவர்களும், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனா ராயலு பேசுகையில், பசுமை பட்டாசு தயாரிக்க ரசாயண கலவை சான்றிதழ் பெறுவது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பித்து குறுகிய நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம். விண்ணப்பித்தில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கணேசன், அபிரூபன், ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 குழந்தைகளுடன் பெண் மாயம் ஆனார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 41) லாரி டிரைவர். இவரது மனைவி சாந்தி மற்றும் 2 குழந்தைகள் திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டனர்.

    அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதை தொடர்ந்து காளிராஜன் ஒத்தப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அதில் அதே பகுதியை சேர்ந்த சோலைராஜ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×