search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானப்படை"

    • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும்.
    • ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிமுகம் செய்தது.

    இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த தகவல் இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

    • வேறு தொழில் தெரியாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும்.
    • முடிந்த அளவு விவசாய நிலங்களை தவிர்த்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86.38 ஏக்கர் நிலம் விமானப்படை தள விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளது.பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு தொழில் செய்துவருகிறோம். விவசாயத்தை விட்டால் வேறு தொழில் தெரியாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும். சூலூர் விமானப்படை தளத்தை ஒட்டி, ஏறத்தாழ 400 ஏக்கர் தரிசு நிலம் கேட்பாரற்று நீண்ட காலமாக கிடைக்கிறது.

    மொத்தம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும், 86.38 ஏக்கருக்காக விவசாய நிலங்களை எடுக்காமல், பயன்பாடின்றி கிடக்கும் தரிசு நிலத்தை எடுக்க தமிழக அரசின் வருவாய்த்துறை முன்வர வேண்டும் எனவிவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இக்கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக முதல்வர், மத்திய அமைச்சர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விவசாயிகளே வரைபடம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் கையகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள 86.38 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் பயன்பாடு இன்றி கிடக்கும் தரிசு நிலம் ஆகியவற்றை இரு வேறு வண்ணங்களில் காட்டும்படியாக உள்ளது. முடிந்த அளவு விவசாய நிலங்களை தவிர்த்துவாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் விமானப்படை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றின் கரையில் உலகப்பெருங்கடல் தினத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் கந்தசாமிக்கண்டர், பரமத்தி பி.ஜி.பி. மற்றும் மெட்டாலா லயோலா ஆகிய கல்லூரியின் தேசிய மாணவர் விமான படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பரமத்திவேலூர் பேருந்து நிலையம் முதல் காவிரி ஆற்றங்கரை வரை ஊர்வலமாக கையில் பதாகை ஏந்தி உலகப்பெருங்கடல் தினத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கந்தசாமி கண்டர் கல்லூரியின் முதல்வர் தங்கராசு விழாவை தொடங்கி வைத்தார். பரமத்திவேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, காவிரி ஆற்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு கையுறைகளை வழங்கி பணிகளை பாராட்டினார்.

    பின்னர் மாணவர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தப் படுத்தினர்.தேசிய விமானப்படை மாணவ, மாணவியர்களின் இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ் விமானத்துக்கு சுமார் 20 ஆயிரம் அடி உயர்த்தில் நடுவானில் எரிபொருள் நிரப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது. #Tejas
    புதுடெல்லி:

    ரஷிய தொழில்நுட்பத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானம் வரும் 2022-ம் ஆண்டில் விமானப்படையில் இணைய உள்ளது. இந்நிலையில், வானில் பறக்கும்போதே தேஜாஸ் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி, இந்திய விமானப்படை சாதனை படைத்துள்ளது. 

    இந்தியப் போர் விமானம் ஒன்றுக்கு வானில் எரிபொருள் நிரப்பப்பட்டது இதுவே முதன்முறை. ரஷ்யத் தயாரிப்பான IL-78 MKI  ரக டேங்கர் விமானத்திலிருந்து, தேஜாஸ் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. 

    சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு தேஜாஸ் விமானம் ஒன்றைத் தயாரிக்க ரூ.463 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேஜாஸ் ரகத்தை சேர்ந்த 123 விமானங்களை சுமார் 50 ஆயிரம் கோடி செலவில் இந்தியா தயாரித்து வருகிறது. 
    ×