search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஸ்து பகவான்"

    • வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள்.
    • வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

    வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு. இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான். இன்று வாஸ்து நாள். வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாட்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

     வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும். பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜைசெய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். இன்று பூமி காரகனாகிய செவ்வாய்க்கிழமை வாஸ்து செய்வது விசேஷம். இன்று வேறு தோஷங்கள் பார்க்க வேண்டாம். நேரம், வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.12 முதல் 10.42 வரை வாஸ்து செய்ய நல்ல நேரம் ஆகும்.

    • பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கும் வழக்கம் காலம்காலமாக உள்ளது.
    • தேய்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்குவது கூடாது.

    கட்டுமான பணிகளை தொடங்கும் முன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கும் வழக்கம் காலம்காலமாக உள்ளது. அதற்காக பொருத்தமான நாள், நட்சத்திரம் போன்ற விஷயங்களை பலரும் தேர்வு செய்வது நடைமுறையாக உள்ளது. நான்கு திசைகளிலும், எந்த ஒரு திசையிலும் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான தலைவாசல் அமைக்கப்படலாம். அதற்கேற்ப நல்ல நாட்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

    வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார்.

    இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம். அதன்படி மனைகோல நல்ல நேரங்கள், வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாட்களின் பட்டியல் இதோ:-

    வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்கள்

    சித்திரை 10-ம் தேதி - காலை 8.00 9:30

    வைகாசி 21-ம் தேதி - காலை 9:12 10:42

    ஆடி 11-ம் தேதி - காலை 6:48 - 8:18

    ஆவணி 6-ம் தேதி - மாலை 2:24 3:54

    ஐப்பசி 11-ம் தேதி - காலை 6:48 8:18

    கார்த்திகை 8-ம் தேதி - காலை 10:00 -11:30

    தை 12-ம் தேதி - காலை 9:12 10:42

    மாசி 22-ம் தேதி - காலை 9:12 - 10:42

    மேற்கண்ட மாதம், நாள் மற்றும் நேரம் விவரங்கள் எல்லா வருடத்திலும் நிலையானதாக இருக்கும். மாற்றமில்லாத இந்த நாட்களுக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம் எதுவும் கிடையாது என்பது ஐதீகம்.

    மேற்கண்ட நாட்களில் பூஜை போட முடியாவிட்டால் கீழ்க்கண்ட விஷயங்களை கவனித்து நல்லநாளில் பூஜை செய்யலாம்.

    வடக்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை தேய்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்குவது கூடாது.

    கிழக்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை வளர்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்கக் கூடாது.

    தெற்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை பவுர்ணமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை உள்ள நாட்களில் தொடங்கக் கூடாது.

    மேற்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை அமாவாசை முதல் வளர்பிறை அஷ்டமி வரை உள்ள நாட்களில் தொடங்கி செய்வது கூடாது.

    மனை கோலும் நேரத்தில் பஞ்சாங்கம் என்ற 5 அங்கங்களில் ஒன்றான யோகம் என்ற அம்சம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனை கோல ஏற்ற 14 யோகங்களாவன:

    பிராம்மியம், மகேந்திரம், சாத்தியம், சிவம், சுப்பிரம், ஆயுஷ்மான், சவுபாக்கியம், துருவம், வைதிருதி, சோபனம், சுபம், பிரீதி, சித்தம், சித்தி ஆகியவையாகும்.

    இந்த யோகங்கள் அமைந்த சுப நேரத்தில் மனை கோலுவது பல நன்மைகளை உண்டாக்கும் என்று வாஸ்து நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    ×