search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஷிங்டன் சுந்தர்"

    • வாஷிங்டன் சுந்தர் வருங்கால நட்சத்திரமாக இருப்பார்.
    • அவர் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளார்.

    2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வங்கதேசத்தில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இந்தியாவுக்கு பேட்டிங்கில் விராட் கோலி, ஷிகர் தவான் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களும் சொதப்பலாக செயல்பட்டு ஏமாற்றமளித்தனர். இதனால் வைட்வாஷ் அவமான தோல்வியை தவிர்க்க கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய தள்ளப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் அசத்தலாக செயல்பட்ட ஒரு சில இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் முதல் போட்டியில் 19 ரன்களும் 2 விக்கெட்டுகளும் 2-வது போட்டியில் 2 விக்கெட்டுகளும் 11 ரன்களும் எடுத்து நல்ல செயல்பாடுகளையே வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் 23 வயது மட்டுமே நிரம்பிய வாஷிங்டன் சுந்தர் ஹர்திக் பாண்டியாவுக்கு நிகராக சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை கொண்டவர் என்று முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வாஷிங்டன் சுந்தர் வருங்கால நட்சத்திரமாக இருப்பார். அவர் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளார். பெரிய ரன்களை எடுப்பதற்கு அவரை நீங்கள் நம்பலாம். சொல்லப்போனால் அவரால் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்யும் 5, 6 ஆகிய இடங்களிலும் விளையாட முடியும். அவரைப் போலவே நன்கு செட்டிலான பின்பு இவராலும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவிக்க முடியும்.

    அதே போல் முழுமையான 10 ஓவர்களை அதுவும் குறைந்த எக்கனாமியில் அவரால் பந்து வீச முடியும். இருப்பினும் நிறைய விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை மட்டும் அவருக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் நல்ல ஆல் ரவுண்டரான அவரை வருங்கால இந்திய அணியில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் ஹர்திக் பாண்டியாவை நீங்கள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்றழைத்தால் வாஷிங்டன் சுந்தரை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்று தாராளமாக அழைக்கலாம். இருவருமே அணிக்கு கச்சிதமாக பொருந்தி பேட்டிங், பவுலிங் ஆகிய துறையில் அசத்தக்கூடியவர்கள்.

    என்று கூறினார்.

    இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
    • வாஷிங்டன் சுந்தர் 64 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 'டாஸ்' வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    தொடக்க வீரர் சுப்மன் கில் 13 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான தவான் 28 ரன்னிலும், ரிஷப்பண்ட் 10 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும், தீபக் ஹூடா 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடித்து ஆடினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார்.

    இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. 

    • தீபக் சாஹர் லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • 2-வது ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது.

    லக்னோ:

    இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி-20 தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    காயம் காரணமாக லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி புதுடெல்லியிலும் நடைபெறவுள்ளது.

    • பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
    • காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 18-ம் தேதி (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்த இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், இந்த தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக விலகி உள்ளார். மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது.

    2022 பிப்ரவரியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
    • காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் காயம் அடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது.

    மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது. அவரின் காயத்தின் அளவு தெரியவில்லை. ஆனால் அவருக்கு உடற்தகுதியில் தொடர்ந்து சிக்கல்கள் உள்ளன.

    ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் காயம் ஒரு பெரிய பயமாக உள்ளது.

    பிப்ரவரி 2022 முதல் சுந்தர் இந்தியாவுக்காக விளையாடவில்லை. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை சுந்தர் தவறவிட்டார்.

    பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. ஐபிஎல் 2022-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் முதல் ஆட்டத்தில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் கையில் ஏற்பட்ட காயத்தால் விலகினார்.

    விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைந்த ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
    • இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஒருசில இந்திய வீரர்கள் விளையாடி வருகிறார்கள். புஜாரா, வாஷிங்டன் சுந்தர், சைனி, உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

    புஜாரா சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். இந்த போட்டி ஜூலை 19-ந் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் சசக்ஸ் அணியின் கேப்டன் டாம் ஹாலண்ட் காயமடைந்தார். இந்நிலையில் வேறு இங்கிலாந்து வீரர்கள் இருந்தாலும் புஜாராவின் அனுபவத்தை மதித்த அந்த அணி நிர்வாகம் அவரை கேப்டனாக அறிவித்தது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 523 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் புஜாரா 231 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் புஜாரா சசெக்ஸ் அணிக்காக மூன்றாவது இரட்டை சதம் அடித்தார்.


    அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதனால் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட அவர் தற்போது குணமடைந்தது மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லேன்ஷைர் அணிக்காக விளையாட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டார்.


    இந்நிலையில் நேற்று நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிராக முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமானார். முதல் போட்டியில் விளையாடிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயத்திலிருந்து குணமடைந்து சுழலுக்கு சவாலான இங்கிலாந்து மைதானங்களில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இதே தொடரில் மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு இந்திய வீரர் உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைந்த ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதேபோல் கெண்ட் அணிக்காக ஒப்பந்தமான இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.


    Pure quality ⚡ @navdeepsaini96 has put on a show in his first @KentCricket outing ✋ #LVCountyChamp pic.twitter.com/UxJbZFUZqE


    ×