search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன திருட்டு"

    • 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது.
    • திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் 'தெப்ட் அண்ட் தி சிட்டி 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது. இந்தியாவில் அதிகளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் தான் அதிகளவில் திருடு போகின்றது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.

    சென்னையில் 2022 -ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகியுள்ளது. பெங்களூரிலும் வாகனத் திருட்டுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் சேர்ந்து திருடி சென்றனர்.
    • சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்டணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

    இந்நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றிற்கு தினமும் பல தரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர்.

    காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் குற்ற செயல்களை தடுத்திடவும் சி.சி.டிவி. கேமரா அமைத்து, அவற்றின் மூலம் போலீசார் கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் சேர்ந்து திருடி சென்றனர். அவர்கள் வாகனத்தை கொண்டு செல்வதை அங்கு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:

    காவேரிப்பட்டணம் நகரின் எந்த பகுதியிலும் போலீசார் சி.சி.டிவி கேமராக்கள் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடும் போகிறது. மேலும் குற்றங்கள் நடைபெற்றால் அவற்றை கண்டறியவும் முடியாத அவலநிலை உள்ளது.

    காவேரிப்பட்டணம் நகரின் அனைத்து பகுதிகளிலும் முறையாக சி.சி.டிவி கேமரா பொருத்தி அவற்றின் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நகரில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினையும், குற்ற செயல் தடுப்பு நடவடிக்கையும் மேம்படுத்திட முடியும்.

    மேலும் ஒன்றை மாதத்திற்குள் காவேரிப்பட்டணம் அங்காளம்மன் திருவிழா நடக்க உள்ளது. இதற்கு சுமார் 1½ லட்சம் பக்தர்கள் இந்த திருவிழாவுக்கு வருவார்கள். அதற்குள் காவேரிப்பட்டணம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள் திருடும் காட்சியும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    • சம்பவங்களின் புகாரை அடுத்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதே போல பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் 3 சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சியும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதே போல வாய்க்கால் மேடு என்ற இடத்தில், வீட்டின் முன்பு மாட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவங்களின் புகாரை அடுத்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • இருசக்கர வாகன திருடர்கள் போலீஸ் கையில் சிக்கவில்லை
    • இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை மேம் பாலத்தின் அடிப்பகுதியில் பார்க்கிங் ஏரியாக்களில் வைக்கப்படுகின்ற இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.

    சமீபகாலமாக மார்த்தாண்டம் சி. எஸ். ஐ . மருத்துவமனை சமீபம், காந்தி மைதானம், மார்க்கெட் ரோடு, வடக்குத்தெரு போன்ற பகுதிகளில் வைக்கப்படுகின்ற இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது திருட்டு போவது வழக்கமாகி வருகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கண்காணிப்பு காட்சிகள் மூலம் ஆய்வு செய்யப் பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை இருசக்கர வாகன திருடர்கள் போலீஸ் கையில் சிக்கவில்லை. இந்நிலையில் மார்த்தாண்டம் காஞ்சிரகோடு, பெரும்புளியை சேர்ந்தவர் ரெஜின் (27) இவர் மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடையின் முன்புறத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றவர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ரஜின்மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து பாலத்தின் அடி பகுதி மற்றும் நிறுவனங்களின் முன்பு நிறுத்தப்படுகின்ற இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

    ×