என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் பகுதியில் அதிகரிக்கும் வாகன திருட்டு
- மோட்டார் சைக்கிள் திருடும் காட்சியும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- சம்பவங்களின் புகாரை அடுத்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதே போல பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் 3 சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சியும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதே போல வாய்க்கால் மேடு என்ற இடத்தில், வீட்டின் முன்பு மாட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவங்களின் புகாரை அடுத்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






