search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறட்சி"

    • மழை மற்றும் வறட்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
    • இயற்கை வழி விவசாயம், எலியை கட்டுப்படுத்தும் முறை.

    நாகப்பட்டினம்:

    ரிலையன்ஸ் அறக்கட்ட ளையின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்து வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளிடையே கலந்துரையாடல் நிகிழ்ச்சி நாகையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முனைவர் திருமேனி தலைவர் மற்றும் பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் அவர்கள் கலந்துகொண்டு மழை மற்றும் வறச்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.

    நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் சந்திரசேகர் (தொழில்நுட்ப வல்லுனர் பயிர்பாதுகாப்பு துறை) வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல், முனைவர் குமார ரெத்தினசபாதி முதல்வர்- ஆதிபாராசக்தி தோட்டக்கலைகல்லூரி வேலூர், முனைவர் காந்திபன் பூச்சியியல் துறை பேராசியியர் மற்றும் தலைவர் பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் ஆகியோர் விளக்கினார்கள்.

    நெற்பயிரில் உர மேலாண்மை, மண் வளத்தை பெருக்குதல், இயற்கை வழி விவசாயம், எலியை எளிய முறையில் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் பாபு இணை பேராசிரியர் அண்ணாம லைப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அவர்கள் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளையின் அலுவலர் பிரவின்ராஜ் செய்திருந்தார்.

    • 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்தினால் தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,
    • மறுகால்நீர் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி அனல் மின் நிலைய அதிகாரிக்கு, கருமேனி ஆறு கழிமுக பகுதி விவசாயிகள் நல கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் அருகேயுள்ள எல்லப்ப நாயக்கன் குளத்தின் மறுகாலில் இருந்து வெளியேறும் உபரிநீர், அனல்மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க கால்வாய் கரையில் மணல் ஒப்பந்தகாரர்களால் சுமார் ½ பர்லாங் தூரம் 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்திலும், அனல் மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க உபரிநீர் கால்வாய் கரை 6 கி.மீ தூரத்திற்கு மிகவும் சேதமடைந்திருப்பாதாலும் குலசை தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்து,

    இதன்விளைவாக உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயத்தோட்டங்கள் மற்றும் பொது மக்கள்ள்குடிநீர் ஆகியன பாதிப்படையும் நிலை உருவாகி உள்ளது. இந்தாண்டு மணிமுத்தாறு, பாபநாச மலைகளில் சரியான மழையில்லை. ஆகையினால் பாபநாச அணைநீர் மட்டம் 97 அடிதான் நிரம்பியிருக்கிறது.ஏல்லப்பநாயக்கன் குளத்து மறுகால்நீர் எளிதில் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது

    எனவே எல்லப்ப நாயக்கன் குளம் மறுகா லிருந்து குலசை தருவைகுளம் வரை உபரிநீர் கால்வாயின் அனல்மின்நிலைய மதிற்சுவர் எதிர் கரையை 8 கி.மீ தூரத்திற்கு சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் சரிசெயய்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளையான்குடி யூனியனில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மூத்த உறுப்பினர் புக்குளி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளரும் இளையான்குடி பேரூராட்சி தலைவருமான நஜூமுதீன் முன்னிலை வகித்தார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, இளையான்குடி வடக்கு ஒன்றியம் முழுவதும் வாக்குச்சாவடி குழு அமைப்பது, தி.மு.க.வின் அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிப்பது, இளையான்குடி யூனியனில் பருவமழை பொய்த்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாணவரணி சந்திரசேகர் தொண்டரணி புலிக்குட்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப. தமிழரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் சாரதி என்ற சாருஹாசன், உதயசூரியன், தட்சிணாமூர்த்தி, சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி வட்டார பகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
    • கடந்த ஆண்டு இங்குள்ள குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதி என்பது 18 கிராம ஊராட்சி ஒரு பேரூராட்சி உள்பட பெரும் பகுதியாகும். இங்கு சுமார் 75 சதவீத பகுதி விவசாய நிலங்களாக உள்ளன. அதுவும் செம்மணல் நிறைந்த தேரிபகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.

    இங்கு ஊடுபயிராக முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு, சக்கர வள்ளி கிழங்கு, நிலக்கடலை, சப்போட்டா, மா, வாழை போன்ற விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு இங்குள்ள தாங்கைகுளம், சடையனேரி குளம், தருவைகுளம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன. திரும்பிய திசைகள் எல்லாம் தண்ணீராகவே காட்சி தெரிந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யாததால் எந்த குளமும், நிரம்பவில்லை. இப்படியே இந்த ஆண்டு மழை ஏமாற்றி விடுமோ?என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். மேலும் தண்ணீர் தேங்க கூடிய பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தற்போது விளையாட்டு மைதானம் ஆக்கி கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

    இன்னும் சில இடங்களில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களாகவும் பயன்படுத்திவிட்டனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல சங்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,

    மழை வருமா? குளங்கள் நிரம்புமா?என்பது கேள்விக்குறியாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் குளங்களை எல்லாம் முழுமையாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு குளங்கள், குட்டை கள் முழுமையாக நிரம்ப வில்லை என்றால் அருகில் உள்ள கடல் நீர்மட்டம் விவசாய விளை நிலங்களில் புகுந்து பல ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறி போகும் என்றார்.

    இதேபோல் சமூக ஆர்வலர் சிவலூர் ஜெயராஜ் கூறும்போது, இதோ வருகிறது, அதோ வருகிறது என்று அனைத்து குளங்களும், குட்டைகளும், புதியதாக உருவாக்கப்பட்ட ஊரணிகளும், மழைக்காக தண்ணீருக்காக, காத்தி ருக்கின்றது. ஆனால் இப்பகுதியில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனால் தான் மழை குறைந்துவிட்டது. என்று பலர் கூறுகிறார்கள்.

    அதனால் தமிழக அரசு, மாவட்ட கலெக்டர், மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடல் நடத்தி பல இடங்களில் வீணாக செல்லும் மழை தண்ணீரை கொண்டு வந்து உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகளை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    சடையனேரி கால்வாய்யை நிரந்தர கால்வாயாக அறிவித்து அடிக்கடி தண்ணீர் திறந்து குளங்கள் மறறும் குட்டைகளில் தண்ணீர் தேக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். என்று கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் இனியும் மழையை நம்பி காத்திருக்காமல் இங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    • திசையன்விளை பகுதியில் மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
    • கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை பகுதியில் பருவகால மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள முதலாளிகுளம், எருமைகுளம், செங்குளம், குருவி சுட்டான்குளம், சுகாதியாகுளம் உள்பட அனைத்து குளங்களும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    இதுவரை பெய்த மழையால் ஒரு அடி ஆழம் கூட நனையவில்லை. இப்பகுதியில் சென்ற ஆண்டும் கால மழை சரியாக பெய்யவில்லை. விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற 400 முதல் 600 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் கிடைத்த தண்ணீரில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.

    கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது. இதனால் தென்னை மற்றும் முருங்கை விவசாயிகள் தண்ணீரின்றி அவதிபட்டனர். இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்யும் பயிர்களை காப்பாற்றிவிடலாம் என நம்பிக்கையில் இருந்தனர்.

    இந்த ஆண்டும் இதுவரை மழை சரியாக பெய்யாததால் சென்ற ஆண்டு நிலைதான் இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடுமோ என்று கவலை அடைந்துள்ளனர். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை இல்லை இன்று காலையிலும் வெயில் அடிக்கிறது.

    ×