search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதராஜ பெருமாள்"

    • வரதராஜ பெருமாள் கோவில் கட்டியதில் இருந்து இதுவரை தேரோட்டம் நடந்ததில்லை.
    • தற்போது தான் முதல் முறையாக கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 5-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் திருப்பல்லக்கு மற்றும் வெண்ணெய்தாழி உற்சவமும், வேடுபரி உற்சவமும் நடைபெற்றது. தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி அளவில் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்ததும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோபுர வாசலில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வரதராஜ பெருமாள் கோவில் கட்டியதில் இருந்து இதுவரை தேரோட்டம் நடந்ததில்லை. தற்போது தான் முதல் முறையாக கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    • உற்சவமூர்த்திகளை வைத்து யாகசாலையில் 27 நட்சத்திரம் அரிசி மூலமாக வரைந்து வைத்தனர்.
    • இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. காலையில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், லட்சுமணர், சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள் நாச்சியார், கருடாழ்வார், அனுமன் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    பின்னர் யாகசாலை மண்டபத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவமூர்த்திகளை வைத்து யாகசாலையில் 27 நட்சத்திரம் அரிசி மூலமாக வரைந்து வைத்தனர். 108 கலசம் வைத்து ஸ்ரீரங்க சடகோப கைங்கரியசபா நிர்வாகி பாலாஜி பட்டர், திருவேங்கடநாதன் பட்டர் தலைமையில் 21 பட்டர்கள் கலந்து கொண்டு பல்வேறு மூலிகையை கொண்டு உலக நன்மைக்காக சுவாதி நட்சத்திர மகா யாகம் நடத்தப்பட்டது.

    இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. கோவில் சார்பாக சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக துலாபாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிறந்த குழந்தையை வைத்து அதற்கு நிகராக காசுகளை வைத்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினார்கள். மேலும் காலையில் இருந்தே பக்தர்கள் கார், வேன் மூலமாக சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், ஆற்காடு , சேலம், திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்தனர்.

    • உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
    • சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க உள்ளது

    பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் மூலவர் சிலை சேதமடைந்துள்ளது.

    இதனால் உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோவிலில் ஐம்பொன் சிலைகளும், கோவில் சுவர்களில் பழங்கால கல்வெட்டுகளும் உள்ளன. பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோவிலை அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதைத்தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக ஆயத்த பணிகளை கோவில் செயல் அலுவலர் கனகலட்சுமி, இந்துசமய அறநிலைத்துறை உதவிபொறியாளர் சந்தானமாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

    • சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர்.

    மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் வீரமலையின் அடிவாரத்தில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் செல்வவிநாயகர், வீரியாயி, கருப்பசாமி, கன்னிமார், ஆஞ்சநேயர், பட்டவன் ஆகிய சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலில் புதிதாக உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை விழா மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யான உற்சவ விழா நேற்று நடைபெற்றது.

    காலையில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து வீரமலைப்பாளைத்தில் உள்ள வீரியாயி கோவிலில் இருந்து அரிசி, பழம், லட்டு, ஜிலேபி, முறுக்கு, அதிரசம், தேங்காய், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய 120 சீர்வரிசை தட்டுகளை பொதுமக்கள் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர். பக்தர்களுக்கு ஆன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தொப்பம்பட்டி, வீரப்பூர், வீரமலைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுவாமிகளுக்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர்.

    மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் வீரமலையின் அடிவாரத்தில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் செல்வவிநாயகர், வீரியாயி, கருப்பசாமி, கன்னிமார், ஆஞ்சநேயர், பட்டவன் ஆகிய சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலில் புதிதாக உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை விழா மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யான உற்சவ விழா நேற்று நடைபெற்றது.

    காலையில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து வீரமலைப்பாளைத்தில் உள்ள வீரியாயி கோவிலில் இருந்து அரிசி, பழம், லட்டு, ஜிலேபி, முறுக்கு, அதிரசம், தேங்காய், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய 120 சீர்வரிசை தட்டுகளை பொதுமக்கள் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமிக்கு திருமண மொய் எழுதினர். பக்தர்களுக்கு ஆன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் தொப்பம்பட்டி, வீரப்பூர், வீரமலைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.
    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதையொட்டி, இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 19-ந்தேதி கருடசேவை திருவிழா நடைபெற்றது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

    காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனைகள் காட்டினர். அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின. அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாவட்ட கைத்தறி துறை உயர் அதிகாரி செல்வம், நகராட்சி ஆணையர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், வை.முருகேசன், ஆ.குமரன், சோ.செந்தில்குமார், மா.வெள்ளைச்சாமி, பா.கவிதா உள்பட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்து மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் காந்திரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை வழியாக, காஞ்சீ சங்கர மடம் அருகே சென்றது. பிறகு 4 ராஜவீதிகள் வழியாக தேர் மீண்டும் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
    ×