search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதராஜ பெருமாள்"

    • கோவிலில் கருவறையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.
    • இங்கு வரதராஜ பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    இத்திருக்கோவிலில் கருவரையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.

    மூலவரின் முன்பாக அழகிய வடிவுடன் பக்தர்களுக்கு அருள் பாளிக்கும் வரதராச பெருமாளை உயிரோட்டமாக பார்த்து கொண்டேயிருக்கலாம்.

    பொதுவாக இறைவன் கிழக்கு முகமாகவே அருள்பாளிப்பார்.

    ஆனால், இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வரதராசப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும்.

    ஒவ்வொரு மாதமும் ஏகாதசி மற்றும் அமாவாசை தினங்களில் சுவாமிக்கு வழிபாடும் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்று வருகிறது.

    திருமணத்தடை புத்திர தோஷம் உள்ளவர்கள் இவ்வரதராச பெருமாள் இறைவனை உள்ளன்போடு

    சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர,

    விரைவில் திருமணமும் ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபட்டு வர, மகப்பேறும் பெறுவதாக ஐதீகம்.

    திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடைபெற்று வரும் பூஜா முறையான வைகானச ஆகமப்படி,

    இவ்வரதராச பெருமாளுக்கு பூஜை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காஞ்சிபுரம் சென்று வரதராசரை தரிசிக்க இயலாதவர்கள் இத்திருத்திலத்தில் தரிசித்து அருளைப் பெறுகின்றனர்.


    • தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி திருக்கல்யாண உற்சவம்நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 6 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து உபநாச்சியாருடன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    பின்னர் 26-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. இதையடுத்து தினசரி காலை, மாலை வேளைகளில் சேஷ வாகனம், தங்க கருட சேவை, ஹனுமந்த வாகனம், யானை வாகனம், புண்ணிய கோடி விமானம், குதிரை வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனமும், 2-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் மற்றும் வேடுபறி உற்சவம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று காலை 11 மணிக்கு கோபுர வாசலில் தீர்த்தவாரி நடக்கிறது. இதையடுத்து 5-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 6-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
    • பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் கடந்த 2-ந்தேதியும், தேரோட்டம் 6-ந்தேதியும் நடைபெற்றது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் 9-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

    அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.

    அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    தீர்த்தவாரி திருவிழாவையொட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
    • வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உலகப் பிரசித்தி பெற்றது. அத்தி வரதர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருளினர்.

    ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் தேரோட்டம் தொடங்கியது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர்.

    இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.

    திருத்தேர் காந்திரோடு தேரடியில் புறப்பட்டு மூங்கில் மண்டபம்,பஸ் நிலையம், சங்கரமடம், பூக்கடை சத்திரம் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடியில் நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் காஞ்சீபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேராட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் 3-வது நாளான இன்று கருடசேவை உற்வம் விமரிசையாக நடை பெற்றது. இதையொட்டி இன்று காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஊதா நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயண பாடலுடன் வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்ததால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நான்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. கருடசேவை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 3-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்
    • 5, 6, 7 ஆகிய தேதிகளில் தசாவதார சேவை நடைபெறுகிறது.

    பரமக்குடி பகுதி எமனேசுவரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்திமான பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். கடந்த 23-ந் தேதி முதல் காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. தினமும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு மண்டகப் படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 4-ந் தேதி காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேலச்சத்திரம் வழியாக பெரிய கடை பஜார் உள்பட முக்கிய பகுதிகளுக்கு சென்று வண்டியூர் சென்றடைவார்.

    5, 6, 7 ஆகிய தேதிகளில் வைகை ஆற்றில் தசாவதார சேவை நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு வைகை ஆற்றில் இருந்து எழுந்தருளி விதிஉலா வந்து 9-ந் தேதி காலை கோவிலுக்கு சென்றடைவார். இரவு கண்ணாடி சேவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், எமனேசுவரம் சவுராஷ்ட்ர சபை நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் செய்து வருகின்றனர்.

    • விழா நாட்களில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா நடைபெற உள்ளது.
    • 26-ந்தேதி கருட சேவை நடக்கிறது.

    ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 98-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மகா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

    அதன்பின் மங்கள வாத்தியங்களுடன், சிறப்பு மங்கள வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

    பின்னர் சுவாமி மாட வீதியின் வழியாக நாதஸ்வர வாத்தியங்களுடன் புறப்பாடும் இரவில் அன்னவாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

    விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் சிறப்பு பூஜைகளுடன் காலை சாமி திருவீதி உலாவும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு கருட சேவை உற்சவமும், 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகா தேரோட்டமும் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழா குழு தலைவர் வக்கீல் சி.எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் செயல் அலுவலர் சிவாஜி, ஆய்வாளர் முத்துசாமி, உபயதாரர்கள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ----------

    • பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று.
    • 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதவிழா 8 நாட்கள் நடைபெறும். பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று. தற்போது தொடங்கியுள்ள இந்த உற்சவத்தில் நாளை பல்லவ உற்சவம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கும். அஸ்திரி மகாத்மிய புராணத்தை பெருமாள் முன் வாசிப்பார்கள்.

    பெருமாள் எப்படி அவதரித்தார் என்கின்ற அவதாரப் பகுதி வாசிக்கும் பொழுது, பெருமாள் ஏராளமான அலங்காரங்களுடன் காட்சி தருவார். பெருமாள் புறப்பாடும் உண்டு.

    வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு நாளாவது காஞ்சீபுரம் சென்று இந்த உற்சவத்தில் பங்கு கொண்டால் நன்மைகளைப் பெறுவார்கள். வருகிற 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

    • கடந்த 45 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
    • தேரின் மொத்த உயரம் 33 அடி ஆகும்.

    பண்ருட்டி காந்தி ரோட்டில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடைபெறுவது சிறப்பாகும்.

    ஆனால் தேர், சிதலமடைந்ததால் கடந்த 45 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. எனவே புதிய தேர் செய்து, தேரோட்டம் நடத்த வேண்டும் என்று பக்தர்களின் குரல் ஓங்கி ஒலித்தது.

    இதையடுத்து புதிய தேர் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ரூ.10 லட்சம் ஒதுக்கியது. மேலும் நன்கொடையாக ரூ.10 லட்சம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.20 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணியை முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தற்போது புதிய தேர் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. தேரின் மொத்த உயரம் 33 அடி ஆகும்.

    இந்த புதிய தேர் வெள்ளோட்டம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. கோவிலில் இருந்து தொடங்கும் தேர் வெள்ளோட்டம், காந்தி ரோடு, ராஜாஜி ரோட்டில் நடக்கிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணியை பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலைவாணி மதியழகன், கிருஷ்ணராஜ், பிரபு, லோகநாதன், செல்வகுமார், கோபி, சுரேஷ், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா மற்றும் கோவில் குருக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
    • தினமும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் உள்ள பழமை வாய்ந்த அபிஷ்ட வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை வழிபட்டனர்.

    விழாவையொட்டி தினமும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    • வரலட்சுமி விரத பூஜையில் சுமங்கலி பெண்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டனர்.
    • நோன்பு கயிறுகளை பெண் பக்தர்கள் ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த வரலட்சுமி விரத பூஜையில் சுமங்கலி பெண்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்பார்வையில் வரலட்சுமி விரத பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம், வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவில் பங்கேற்ற பெண் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை வரதராஜபெருமாள் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மண்டபத்தில் கலசம் வைத்து, சிறப்புப்பூஜைகள் செய்தனர். வேத பண்டிதர்கள் வரலட்சுமி விரத கதையை படிக்க பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கதையைக் கேட்ட பின் வரலட்சுமியை வழிப்பட்டனர்.

    இதையடுத்து நோன்பு கயிறுகளை பெண் பக்தர்கள் ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டனர். தங்களின் கணவர்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும், தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வரம் வேண்டி வரலட்சுமி விரத பூஜையை மேற்கொண்டனர்.

    விரத பூஜையில் காலை முதல் மாலை வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்று வழிபட்ட பெண் பக்தர்களுக்கு சிவன் கோவில் சார்பில் தாம்பூலம் வழங்கப்பட்டது.

    • வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் திருவாடிப்பூரம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார் ஆகியோருடன் வைர வைடூரிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, இரட்டைக் குடையுடன், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருடன், வரதராஜ பெருமாள் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×