search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடவள்ளி"

    • இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
    • ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    கோவை:

    கோவை வடவள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (29). இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

    இந்தநிலையில் செல்வம் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை தடாகம் அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (26). பெயிண்டர். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் சந்தோஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

    மேலும் அவரது காலில் காயம் ஏற்பட்டு ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறி கண்டித்தார்.

    இதனால் அவர் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக வீடுகளை நோட்டமிட்டவாறே அங்கேயே சுற்றி திரிந்தார்.
    • வாலிபரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்து மருதமலை ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில், நேற்று இரவு இந்த பகுதிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். முதலில் யாரோ உறவினர் ஒருவரை பார்க்க வந்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் நினைத்தனர்.

    ஆனால் வாலிபர் நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தார். மேலும் வீடுகளை நோட்டமிட்டவாறே சென்றார்.

    இதற்கிடையே குன்றக்குடி அடிகளார் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அந்த வாலிபர் புகுந்து விட்டார்.இதனை பார்த்த வீட்டில் இருந்த பெண், அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும், மர்ம நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். பொதுமக்கள் சுதாரித்து கொண்டு மர்மநபரை பிடித்தனர்.

    பின்னர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அப்போது வாலிபர் போலீசாரை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து போலீசார் அவரை துரத்தி ெசன்று பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அந்த நபர் சுப்பிரமணியபுரம் ஜி.என்.மில் பகுதியை சேர்ந்த மனோகர்(வயது42) என்பதும், ஏற்கனவே இவர் மீது சாய்ப்பா காலனி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு இருப்பதும், தற்போது ஐ.ஓ.பி.காலனி குடியிருப்பு வீட்டில் திருடும் நோக்கத்தில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது ெசய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    வடவள்ளி, 

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மேற்கு மாவட்டம் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.

    நிகழ்ச்சியில் மேற்கு மண்டல் தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் விஸ்வநாதன், விஷ்ணுபிரபு, வக்கீல் சுந்தர்ராஜன், வக்கீல் மோகன சுந்தரம். வட்ட செயலாளர்கள் வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கவுன்சிலர்கள் லட்சுமி , பத்மாவதி , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சின்னசாமி, சிடிசி துரைசாமி , மகேஷ், ராஜ்குமார், ரவி, ஞானசேகர், ஆறுமுகம் , ஜனகராஜ், முன்னாள் துணைத்தலைவர் சிவசாமி , மகளிரணி துணை அமைப்பாளர்கள் முத்துலட்சுமி, சின்னதங்கம், பகுதி நிர்வாகிகள் வி.எஸ்.ரங்கராஜ், மணி , பாபு, பகுதி ஐடிவிங் கமல்ராஜ், ஆனந்த பாரதி, ஆவின் குருசாமி, பகுதி இளைஞர்கள் அணி நிரஞ்சன் , சக்திவேல் பூபதி, ராஜீவ்காந்தி நகர் கலைச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • நியூ தில்லை நகர் பகுதியில் 4 வீதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    வடவள்ளி

    கோவை வடவள்ளி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்த வடவள்ளி போலீசார் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வடவள்ளி நியூ தில்லை நகர் பகுதியில் 4 வீதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கண்காணிப்பு மையம தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மீட்டிங் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அனைத்து காமிராக்களையும் கண்காணிக்கப்பட உள்ளது.

    தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட தலைமை தலைவர் எஸ்.எம்.முருகன் தலைமையில், பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் படி வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, கண்காணிப்பு காமிராவை திறந்து வைத்தார்.முதற்கட்டமாக 35 காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட வடவள்ளி கிளை தலைவர் சுந்தரபாண்டியன், பொருளாளர் சேகர் மற்றும் தலைமை பொருளாளர் வெனிஸ், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் வடவள்ளி கிளை துணைத்தலைவர்கள் செல்வசிங், அர்ஜுனன், ராஜேந்திரன், சாமிநாதன் மற்றும் துணைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கந்தசாமி, கோவை ஜுடுததேயுஸ், விஜயகுமார், ஆலோசகர்கள் சேர்மதுரை, லியாகத் அலி மற்றும் வடவள்ளி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • 20-க்கும் மேற்பட்ட மளிகைக்கடை மற்றும் பேன்சி கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனைத்து மளிகைக்கடைகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும், எளிதாக திறக்கும் பூட்டை கடைக்கு போட வேண்டாம்.

     வடவள்ளி

    கோவை வடவள்ளி பகுதியில் கடந்த சில தினங்களாக 20-க்கும் மேற்பட்ட மளிகைக்கடை மற்றும் பேன்சி கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு கூட்டம் நடத்த போலீசார் கேட்டுக்கொண்டனர்.

    அதை தொடர்ந்து இன்று தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட தலைவர் எஸ்.எம்.முருகன் அறிவுத்தலின் படி வடவள்ளி கிளை அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

    இந்த கூட்டத்தில் அனைத்து மளிகைக்கடைகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும், எளிதாக திறக்கும் பூட்டை கடைக்கு போட வேண்டாம், கடையின் முன்பு வெளிச்சம் அதிகமாக இருக்க விளக்கும் பொருத்த வேண்டும். சந்தேகம்படும் படி வெளியாட்கள் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தரவேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைக்க வேண்டாம் , மீறும் பட்சத்தில் கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமை நிராகரி க்கப்படும் என்று வடவள்ளி போலீஸ் சப்-இன்ஸ்செ பெக்டர்கள் செந்தில்கு மார், முத்துகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் வடவள்ளி கிளை தலைவர் சுந்தரபாண்டியன், பொருளாளர் ஒய்.எ.ஜி.சேகர் உள்ளிட்ட சங்க வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

    • நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்

    கோவை :

    கோவை வடவள்ளி சின்மையா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32). இவர் பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோடு சென்றார். அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவில் பூட்டப்பட்டு இருந்த பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீேராவை திறந்து அதில் இருந்த செயின் 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பிய கந்தசாமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து கந்தசாமி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனையடுத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகிறார்கள். 

    • வடவள்ளி யானைமடுவு பகுதியில் அமைத்தனர்
    • 3 தண்ணீர் தொட்டிகள் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

    வடவள்ளி,

    மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியான ஓணாப்பாளையம் அடுத்த யானைமடுவு வனப்பகுதி உள்ளது. கனுவாய், நரசீபுரம் உள்பட பல்வேறு வனப்பகுதியில் இருந்து இடப்பெயர்ச்சி அடையும் வன விலங்குகள் யானைமடுவில் வருகிறது.

    இது வனவிலங்குகள் இடம் பெயர்ச்சியின்‌ போது தங்கி இளைப்பாறி செல்லும் இடம் ஆகும். அதற்கான சூழ்நிலையும் இங்கு நிலவுகிறது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் தண்ணீர் இல்லாமல் தண்ணீர் தேடி அருகே உள்ள ஊர்களுக்கும் நுழைகிறது.

    இதனை தடுக்க இந்த பகுதியில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. 3 தண்ணீர் தொட்டிகள் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதில் தண்ணீர் நிரப்ப போர்வெல் அமைத்து சோலார் மின்சாரம் மூலம் தண்ணீர் தொட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டும், சோலார் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல முடியாமல் வனத்தில் தண்ணீர் தொட்டி யில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தினமும் தண்ணீர் குடிக்க வரும் காட்டு எருமை, யானை , மான் , மயில் போன்ற வன விலங்குகள் தாகம் தணிக்க முடியாமல் அவதி பட்டு வந்தது. இதையடுத்து தற்போது புதிதாக போர் அமைக்கும் பணியை வனத்துறையினரால் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வந்தது. நேற்று மாலை நிறைவடைந்தது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும்.

    ×