search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadavali"

    • மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
    • கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடவள்ளி 

    கோவை மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் வேலை பார்த்து வரும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் சங்கம் ஒன்றும் வைத்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி பேராசிரியர்கள் இன்று காலை திடீரென பல்கலைக்கழகத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    தகவல் அறிந்ததும் துணைவேந்தர் காளிராஜ், பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் நேரில் வந்து பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.அதனை ஏற்று பேராசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த கல்லூரிக்கு சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும்.
    • ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

    வடவள்ளி

    கோவை தொண்டா முத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவரா யபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும்.

    இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் சுமார்‌ 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை டஸ்கர் இன யானை குப்போபாளையம், அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விளை நிலங்களில் புகுந்து சோளம், கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    குப்பேபாளையம் பகுதியில் வெங்காய பட்டறை ஒன்றை இடித்து தள்ளி சூறையாடியது. ஜெயப்பரகாஷ் என்பவரது தோட்டத்தில் புகுந்து மோட்டார் பம்புகளை இடித்து தள்ளியது. யானையை பார்த்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகள் மிரண்டு ஓடியது.

    இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அட்டுக்கல் வழியாக கெம்பனூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை வடக்கு வீதியில் ரங்கராஜ் என்பவர் வீட்டின் முன்பு நீண்ட நேரம் நின்றது.

    நாய்கள் சத்தம் கண்டதை கண்டு வெளியில் வந்த சிலர் யானை நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தினர். யானை ஊருக்குள் பல இடங்களில் சுற்றி இன்று அதிகாலை 5 மணியளவில் வனப்பகுதியை நோக்கி சென்றது.

    யானை ஊருக்குள் வீதியில் வந்ததை மாடியில் நின்றவாறு சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் அருகே விளைநிலம் மற்றும் குடியிருப்பையொட்டி பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஒரு‌மாதத்தில் மட்டும் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் இரண்டு நபர்கள் யானை தாக்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    வடவள்ளி, 

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மேற்கு மாவட்டம் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.

    நிகழ்ச்சியில் மேற்கு மண்டல் தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் விஸ்வநாதன், விஷ்ணுபிரபு, வக்கீல் சுந்தர்ராஜன், வக்கீல் மோகன சுந்தரம். வட்ட செயலாளர்கள் வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கவுன்சிலர்கள் லட்சுமி , பத்மாவதி , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சின்னசாமி, சிடிசி துரைசாமி , மகேஷ், ராஜ்குமார், ரவி, ஞானசேகர், ஆறுமுகம் , ஜனகராஜ், முன்னாள் துணைத்தலைவர் சிவசாமி , மகளிரணி துணை அமைப்பாளர்கள் முத்துலட்சுமி, சின்னதங்கம், பகுதி நிர்வாகிகள் வி.எஸ்.ரங்கராஜ், மணி , பாபு, பகுதி ஐடிவிங் கமல்ராஜ், ஆனந்த பாரதி, ஆவின் குருசாமி, பகுதி இளைஞர்கள் அணி நிரஞ்சன் , சக்திவேல் பூபதி, ராஜீவ்காந்தி நகர் கலைச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ×