என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanthi"

    • வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    வடவள்ளி, 

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மேற்கு மாவட்டம் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.

    நிகழ்ச்சியில் மேற்கு மண்டல் தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் விஸ்வநாதன், விஷ்ணுபிரபு, வக்கீல் சுந்தர்ராஜன், வக்கீல் மோகன சுந்தரம். வட்ட செயலாளர்கள் வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கவுன்சிலர்கள் லட்சுமி , பத்மாவதி , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சின்னசாமி, சிடிசி துரைசாமி , மகேஷ், ராஜ்குமார், ரவி, ஞானசேகர், ஆறுமுகம் , ஜனகராஜ், முன்னாள் துணைத்தலைவர் சிவசாமி , மகளிரணி துணை அமைப்பாளர்கள் முத்துலட்சுமி, சின்னதங்கம், பகுதி நிர்வாகிகள் வி.எஸ்.ரங்கராஜ், மணி , பாபு, பகுதி ஐடிவிங் கமல்ராஜ், ஆனந்த பாரதி, ஆவின் குருசாமி, பகுதி இளைஞர்கள் அணி நிரஞ்சன் , சக்திவேல் பூபதி, ராஜீவ்காந்தி நகர் கலைச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மார்கண்டேய கட்ஜு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Karunanthi
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    தொடக்கத்தில் உடல்நிலையில் ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

    அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.



    கருணாநிதி உடல்நலம் குன்றிய முதல் நாளே துணை முதலமைச்சர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தனர்.

    நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதே போன்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் கருணாநிதி நலம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் நேற்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர். 

    இவ்வாறாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பலரும் கருணாநிதி விரைவில் நலம் பெற்று எழுந்து வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் சொத்து மதிப்பு என்ன என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    `மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் ரொம்பவும் பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அவரது சொத்து மதிப்பு என்ன? அவரது மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன? காமராஜ் இறக்கும் போது அவரிடம் ஒன்றும் இல்லை. என்ன ஒரு வேறுபாடு' என்று குறிப்பிட்டுள்ளார். 
    முன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சமூக வலைதளத்தில் மார்கண்டேய கட்ஜு கருத்து பதிவிட்டார். அதில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதா பெண் சிங்கம் போன்றவர் என்றும், தடைகளை தகர்த்து அவர் மீண்டு வருவார் எனவும் சமூக வலைத்தளத்தில் கட்ஜு கூறியிருந்தார். 

    இந்நிலையில், தற்போது கருணாநிதி பற்றிய அவரது கருத்து மற்றும் ஜெயலலிதா பற்றிய கட்ஜுவின் முந்தைய கருத்து ஆகியவற்றை முன்வைத்து, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விவாதம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்க​து. #Karunanthi #MarkandeyKatju

    ×