search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்வெல்"

    • பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.
    • காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பவானிசாகர் அணையில் தினந்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

    இந்நிலையில் பவானிசாகர் அணை பகுதியில் தண்ணீரை தேடி வந்த 3 காட்டுயானைகள் பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.

    பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்த சின்டெக்ஸ் டேங்க் மற்றும் போர்வெல், தென்னை மரங்களை இழுத்து சேதப்படுத்தியது. அருகே குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக தேடி வரும் காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிகள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டெல்லியில் விகாஸ்புரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக செய்திகள் வெளியானது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பொழுது குழியில் விழுந்தது குழந்தை இல்லை, 30 வயது மதிப்புடைய நபர் என்று தெரிய வந்துள்ளது.

    அந்த நபர் எப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் என்றும், இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகளும் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார்களால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் 40 அடி போர்வெல் குழியில் குழந்தை ஒன்று விழுந்தது.
    • குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    மூடப்படாத போர்வெல் குழிகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விகாஸ்புரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு போர்வெல் குழி உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    • பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் இந்தப் பிரச்சனையை மிக மிக தீவிரமாகப் பார்க்கிறேன். அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

    அனைத்து தொட்டிகளையும் கையகப்படுத்தி அனைத்து நீர் கிடைக்கும் இடங்களையும் கண்டறிந்து வருகிறோம். 217 சுரங்கங்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு நகரில் 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன. காவிரியில் இருந்து என்ன தண்ணீர் வருகிறதோ அதுதான் வருகிறது.

    எனது வீட்டில் உள்ள போர்வெல் உள்பட அனைத்து போர்வெல்களும் வறண்டு கிடக்கின்றன என தெரிவித்தார்.

    • மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் அலுவலகம் வந்து ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.
    • ராமசாமியின் இடது கண், இமை, நெற்றி ஆகிய பகுதிகளில் காயம் உள்ளதாக தெரிகிறது

    இரணியல் :

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள போர்வெல் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்தவர் ராமசாமி (வயது 56). இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அகரம் கிராமம் கொத்தம்பாளையம் ஆகும்.

    திங்கள் நகரில் உள்ள போர்வெல் அலுவலகத்திலேயே ராமசாமி தங்கி உள்ளார். நேற்று முன்தினம் மதியம் அவர் போர்வெல் லாரியை திக்கணம்கோட்டில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் அலுவலகம் வந்து ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் மாடத்தட்டுவிளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் போர்வெல் நிறுவனத்துக்கு வந்துள்ளார். அங்கு யாரும் இல்லாததால் பக்கத்து அறையை எட்டி பார்த்தபோது ராமசாமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போர்வெல் கம்பெனி ஊழியர் கவியரசனுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ராமசாமியை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ராமசாமியின் இடது கண், இமை, நெற்றி ஆகிய பகுதிகளில் காயம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் எப்படி இறந்தார்? திக்கணம்கோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்தில் சிக்கினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் அமைக்க ப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி மேலத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மூலம் போர்வெல் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அங்கிருந்து குடிநீர் மேலத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போ ர்வெல் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு போதிய மின் வசதி இல்லாத காரணத்தால் போர்வெல் பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    இதனால் ஊராட்சி பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இருப்பினும் கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்க எதுவாக மாவட்ட ஊராட்சி சார்பாக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் போர்வெல் அமைக்க ப்பட்டு உள்ளது.

    இந்த இடத்தில் போதிய மின் வசதி இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படாமல் போர்வெல் இயங்காமல் உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேல தெருவில் இருந்து மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாதாள சாக்கடை பிரச்சினையை சரி செய்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் இடம் பெறும்.
    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் 2-வது போர்வெல் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.‌

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் இன்று தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாநகராட்சியில் நம்ம வார்டு நம்ம மேயர் திட்டத்தின் கீழ் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து வந்தேன். அந்த திட்டம் முடிவு அடைந்தது.

    இந்தத் திட்ட மூலம் தினமும் ஆய்வு செய்ததில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மக்களோடு மக்களாக நின்று ஆய்வு செய்து வந்தேன்.

    அப்படி ஆய்வு செய்ததில் வார்டுகளில் வசதிகள் மேம்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

    தாயம்படி முதல் டிவிசனுக்கு ரூ.127 கோடி, இரண்டாம் டிவிசனுக்கு ரூ.155.44 கோடி, 3-ம் டிவிசனுக்கு ரூ.460.4 கோடி, 4-ம் டிவிசனுக்கு ரூ.211.41 கோடி அளவுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

    இதில் சாலை வசதி மேம்படுத்துதல், பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் இடம் பெறும்.

    இந்த திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நிதி விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்.

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2-வது போர்வெல் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.‌ இந்த திட்டம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு செயல்பட்டு வந்துவிடும்.

    3-வது போர்வெல் அமைக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது.

    அதன் பிறகு தஞ்சை மாநகரில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை, தட்டுப்பாடு இருக்காது. 24 மணி நேரமும் தடை இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு விடும்.

    தஞ்சை மாநகரில் சாலைகளில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வணக்கம் தஞ்சை என்ற மொபைல் செயலி விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    அதன் பிறகு பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே இந்த மொபைல் செயலின் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம்.

    இன்னும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மாநகரில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடவள்ளி யானைமடுவு பகுதியில் அமைத்தனர்
    • 3 தண்ணீர் தொட்டிகள் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

    வடவள்ளி,

    மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியான ஓணாப்பாளையம் அடுத்த யானைமடுவு வனப்பகுதி உள்ளது. கனுவாய், நரசீபுரம் உள்பட பல்வேறு வனப்பகுதியில் இருந்து இடப்பெயர்ச்சி அடையும் வன விலங்குகள் யானைமடுவில் வருகிறது.

    இது வனவிலங்குகள் இடம் பெயர்ச்சியின்‌ போது தங்கி இளைப்பாறி செல்லும் இடம் ஆகும். அதற்கான சூழ்நிலையும் இங்கு நிலவுகிறது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் தண்ணீர் இல்லாமல் தண்ணீர் தேடி அருகே உள்ள ஊர்களுக்கும் நுழைகிறது.

    இதனை தடுக்க இந்த பகுதியில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. 3 தண்ணீர் தொட்டிகள் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதில் தண்ணீர் நிரப்ப போர்வெல் அமைத்து சோலார் மின்சாரம் மூலம் தண்ணீர் தொட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டும், சோலார் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல முடியாமல் வனத்தில் தண்ணீர் தொட்டி யில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தினமும் தண்ணீர் குடிக்க வரும் காட்டு எருமை, யானை , மான் , மயில் போன்ற வன விலங்குகள் தாகம் தணிக்க முடியாமல் அவதி பட்டு வந்தது. இதையடுத்து தற்போது புதிதாக போர் அமைக்கும் பணியை வனத்துறையினரால் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வந்தது. நேற்று மாலை நிறைவடைந்தது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும்.

    ×