search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வசந்த உற்சவம்"

    • மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவம் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்கள் எடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதன புண்ணிய சேத்திரம் ஆகும். அருளாளர் நால்வரால் பாடல் பெற்றது. மூர்த்தி, தலம், விருட்சம் என்ற பெருமை பெற்றது. புதனுக்கு அதிபதியாக விளங்கும் தலம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் நடக்கும் கோடை வசந்த உற்சவ திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திரம் அன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளு கிறார்கள். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்படும்.

    அதன் பிறகு மாலையில் சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோவிலுக்கு செல்கிறார்கள். சுவாமி சன்னதி, பேச்சி கால் மண்டபத்தில் பாத பிட்சாடனம், தீபாராதனை முடிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருள்வார்கள். அதன் பிறகு அங்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    கோடைகால வசந்த உற்சவ திருவிழா நடக்கும் மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட மெலட்டூர் சோமாசித்தெருவில் எழுந்தருளியிருக்கும் கற்பக மகாமாரியம்மன் கோவில் 37-ம் ஆண்டு வசந்த உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி காலை விக்னேஷ்வர பூஜையும், அதனை தொடர்ந்து வெட்டாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், புஷ்ப காவடி, அக்னிசட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.

    இரவு நாதஸ்வர இசையுடன் முத்து பல்லக்கில் கற்பக மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும், தொடர்ந்து விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நிறைவு விழாவான நேற்று உற்சவ மூர்த்திகளான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு கலச ஸ்தாபனம் செய்து கணபதி பூஜை, புண்ணியாவதனம், வருண பூஜை செய்தனர். கலசத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்து ஹாரத்தி சமர்ப்பித்து வசந்த உற்சவம் நடத்தப்பட்டது.

    அதன்பிறகு உற்சவர்களான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தீப, தூப, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி சிவன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலூ, கோவல் துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணாரெட்டி மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 24-ந்தேதி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், தீமிதி விழா நடக்கிறது.
    • 25-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.

    காளசமுத்திரம் கோவிலில் நடந்த அக்னி வசந்த விழாவையொட்டி நடந்த தபசுமரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் தினமும் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

    மேலும் நாடக மன்ற குழுவினரின் மகாபாரத நாடகங்களும் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக கோவில் முன்பு தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாடக நடிகர் ஒருவர் அர்ச்சுனன் வேடமணிந்து தபசு மரம் ஏறி ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்ச்சியை நடித்தார். தவத்தை கலைக்க சிவனும் பார்வதியும் வேடன் வேடத்தியாக வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி திருமணமாகி குழந்தை வரம் வேண்டி பெண்கள் வணங்கினர். மேலும் தபசு மரத்தின் மேலிருந்து பூ, பழம், உள்பட பல்வேறு பிரசாதங்கள் அப்போது வீசப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இதில் வழிபட்டனர். வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிஅளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. மறுநாள் தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கமலவல்லி நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருச்சி உறையூரில் பிரசித்திபெற்ற கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான இங்கு வசந்த உற்சவம் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணி அளவில் வசந்த மண்டபம் வந்தடைந்தார்.

    அங்கு அலங்காரம், அமுது செய்து கண்டருளிய பின் சாற்று மறை செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பின்னர் தாயார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    • அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு உற்சவர் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதைத்தொடர்ந்து வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வசந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை, மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடகசாலை தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    கோடைகாலம் என்பதால் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது. மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிந்து வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கும் ஆண்டாள், ரெங்கமன்னாரை ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • இந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 9-ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார்.

    பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த வசந்த உற்சவ திருவிழாவின் 7-ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டளுகிறார், 9-ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
    • வசந்த உற்சவம் விழா வருகிற 10-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது.

    திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு இன்று மாலை திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் வசந்த விழா தொடங்குகிறது.

    மாலை 6 மணிக்கு கேடயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருக்குளம் வீதிகள் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க எழுந்தருள்வார்.

    அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 4 வீதிகள் வழியாக சுவாமி உலா வந்து கோவிலுக்குள் சென்றடைவார்.

    வசந்த உற்சவம் விழா வருகிற 10-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • வசந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • வசந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவ மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

    அங்கு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஜோடஉபச்சார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு உற்சவ மண்டபத்தை இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தனர். வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாடேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×