என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Kalahasti Temple"

    • தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சமுதாய கேதார கவுரி விரதப் பூஜை நடப்பது வழக்கம்.
    • 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சமுதாய கேதார கவுரி விரதப் பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

    மறுநாள் 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடக்கிறது. எனவே கோவில் சுவாமிநாத குருக்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் அறிவுரையின் பேரில் கோவிலில் நடக்க இருந்த கேதார கவுரி விரத பூஜை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், எனக் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தெரிவித்துள்ளார்.

    • வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி நடத்தினர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அஞ்சி விநாயகர் சன்னதியில் சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது.

    முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் ஆகம விதிப்படி ஹோம குண்டத்தை ஏற்பாடு செய்து, அதில் சிறப்பு ஹோமத்தை வளர்த்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி நடத்தினர்.

    சிறப்பு ஹோம பூஜையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் இணை ஆணையாளர் மல்லிகார்ஜுன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 10-ந்தேதி வரை உற்சவங்கள் நடைபெறுகிறது.
    • மகாதீபாராதனையை தொடர்ந்து நைவேத்தியங்களை சமர்ப்பித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பவித்ரோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பவித்ரோற்சவம் தொடங்கியது. முன்னதாக கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் உற்சவமூர்த்திகள் உள்பட பரத்வாஜ் மகரிஷியின் உற்சவ சிலைக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

    முன்னதாக நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு பயன்படுத்தும் கவசங்கள், தூப, தீப, நெய்வேத்தியங்களுக்கு பயன்படுத்தும் பொருட்கள், அலங்கார பொருட்களை கோவில் ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். அதனை பயன்படுத்தி நேற்று பவித்ரோற்சவத்தை தொடங்கினர்.

    கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பன்னீர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் மகாதீபாராதனையை தொடர்ந்து நைவேத்தியங்களை சமர்ப்பித்தனர். வருகிற 10-ந்தேதி வரை உற்சவம் நடக்கிறது.

    நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள், கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்யப்பட்டது.
    • சாமி படம், பிரசாதம் வழங்கினர்.

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆகியோர் பங்கேற்று பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

    கோவிலுக்கு வந்த அவர்களை, காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சாமி படம், பிரசாதம் வழங்கினர். அப்போது காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • தங்க நாகப்படகுகளை வைத்து ராகு-கேது பூஜை செய்ய ரூ.10 ஆயிரம் வரை கட்டணம்.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு கூட்டம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதனரெட்டி பங்கேற்றார்.

    கூட்டத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் முதல் கோவிலில் நிலுவையில் உள்ள தங்கத்தைப் பயன்படுத்தி தங்க நாகப்படகுகளை தயாரித்து ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜைக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தங்க நாகப்படகுகளை பயன்படுத்தி ராகு-கேது பூஜை செய்ய ஒரு பூஜைக்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் துணைக் கோவில்களான அர்த்தநாரீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில், அன்னப்பூர்னேஸ்வரர் கோவில்களின் மகா கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். ஆன்மிக தலமான ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களை புனரமைக்க வேண்டும்.

    புதிதாக சிவன் கோவில்களை கட்ட வேண்டும். அதற்காக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சம் வரை பண உதவி வழங்க வேண்டும். இதற்காக, அறநிலையத்துறையிடம் இருந்து அனுமதி வந்ததும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தர்மராஜா கோவில் வளாகத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    வரதராஜ பெருமாள் கோவில் விடுதியை சீரமைக்க வேண்டும். முத்தியாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தை புனரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    சிவன் கோவிலில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பிற துறை அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

    • 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டர்கள் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பங்கேற்றனர்.
    • இந்தக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வரை நீடிக்கும்.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் ‌கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக. சீனிவாசுலு மேற்பார்வையில் பக்தர்கள் வரிசைகளில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் நடக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அத்துடன் கோவிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகளான சுப்ரபாத சேவை, ருத்ர ஹோமம், சண்டி ஹோமம், அர்ச்சனை, கல்யாண உற்சவம், கோ பூஜை, தீபாராதனை மற்றும் 4 கால ருத்ர அபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவில் அதிகாரிகள், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதி ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், விரைவு தரிசனம் செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நிறைவு விழாவான நேற்று உற்சவ மூர்த்திகளான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு கலச ஸ்தாபனம் செய்து கணபதி பூஜை, புண்ணியாவதனம், வருண பூஜை செய்தனர். கலசத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்து ஹாரத்தி சமர்ப்பித்து வசந்த உற்சவம் நடத்தப்பட்டது.

    அதன்பிறகு உற்சவர்களான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தீப, தூப, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி சிவன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலூ, கோவல் துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணாரெட்டி மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை லட்ச வில்வார்ச்சனை மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை லட்ச வில்வார்ச்சனை மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு (உற்சவ மூர்த்திகளுக்கு) குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது. அதையொட்டி தினமும் காலை, முதல் கால அபிஷேகம், 2-வது கால அபிஷேகம், 3-வது கால அபிஷேகத்துக்கு பின்னர் மற்றும் மாலை 4-வது கால பிரதோஷ கால அபிஷேகத்துக்கு பின்னர் வில்வார்ச்சனை நடக்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 3-ந்தேதி காலை அஷ்டோத்திர கலசாபிஷேகம், மாலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வெள்ளி அம்பாரிகளில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ந்தார். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்திர 108 சத சங்காபிஷேகம் மற்றும் மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    காலை 9 மணியில் இருந்து சங்கல்பம், யாக பூஜை, நைவேத்தியம், தீபாராதனை, மாலை 5 மணியளவில் தட்சிணாமூர்த்திக்கு சந்தன அலங்காரம் செய்து, சகஸ்ர நாமார்ச்சனை, தீபாராதனை, இரவு 8 மணியளவில் உற்சவர் தட்சிணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளேயே வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    குருப்பெயர்ச்சி விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நேற்று நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் இருந்து கோவிலில் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பாக சொர்ணமுகி ஆற்றுக்கு மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
    சித்தூர் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பாக சொர்ணமுகி ஆற்றுக்கு மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் கோவில் அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள் பங்கேற்று கோவிலில் சிறப்புப்பூஜைகள் செய்து, மஞ்சள், குங்குமம், பட்டு வஸ்திரம் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலையில் சுமந்த படி ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு சென்று, ஓடும் தண்ணீரில் மங்கள பொருட்களை தூவி சமர்ப்பித்தனர். அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டியின் குடும்பத்தினர், பக்தா்கள் பங்கேற்றனர்.
    திருவோண நட்சத்திரமும், சப்தமி திதியும் சேர்ந்து ஒரேநாளில் ஒன்றாக வந்ததால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி சோமவார பூஜை நிகழ்ச்சி நடந்தது.
    தெலுங்கு கார்த்திகை மாதத்தில் மகாவிஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்துடன் வரும் சப்தமி திதி நாள் அன்று கோடி சோம வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் திருவோண நட்சத்திரமும், சப்தமி திதியும் சேர்ந்து ஒரேநாளில் ஒன்றாக வந்ததால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி சோமவார பூஜை நிகழ்ச்சி நடந்தது.

    அதையொட்டி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பல வண்ண மலர்களால் மகாசிவலிங்கம் வடிவமைத்து, அதன் மீது தீபம் ஏற்றி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவிலில் உள்ள கண்ணாடி மண்டபம் அருகில் பஞ்ச தீப ஸ்தம்பம் ஏற்பாடு செய்து, அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    முக்கிய விருந்தினராக பங்கேற்ற வேமிரெட்டி பிரபாகர்ரெட்டி எம்.பி. தம்பதியினர் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் ஏற்பாடு செய்திருந்த தீபங்களை ஏற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள் பலவண்ண மலர்கள் மீது வைத்திருந்த தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இதனால் தட்சிணாமூர்த்தி சன்னதி வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஒளிர்ந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு நைவேத்தியம் மற்றும் மந்திர புஷ்பம் நிகழ்ச்சி நடந்தது. ஆதிசங்கரர் உருவப்படத்தை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
    பிரசித்திப் பெற்ற கேதார்நாத் சிவன் கோவிலில் ஆதிசங்கரர் ஜீவசமாதியும், அதன் மீது அவரின் உருவச்சிலையும் இருந்தது. அது, இயற்கை சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டது. கேதார் நாத்தில் புதிதாக ஆதி சங்கரர் ஜீவசமாதியும், அவரின் உருவச்சிலையும் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

    அதையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மன் கோவில் அருகில் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது மடாதிபதிகள் மற்றும் ஆன்மிக பிரமுகர்களின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதுதொடர்பாக நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

    அதைத்தொடர்ந்து கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு காணொலி காட்சி மூலம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஒளி பரப்பப்பட்டது. பின்னர் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு நைவேத்தியம் மற்றும் மந்திர புஷ்பம் நிகழ்ச்சி நடந்தது. மாலை ஆதிசங்கரர் உருவப்படத்தை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. கோலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×