search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி"

    • பெண் கைது
    • வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் இவரது மனைவி சென்னம்மாள் (வயது 36).

    இவர் வீட்டில் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்தி ற்கு கடத்தி வருவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா சப்- இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் சென்னம்மாள் வீட்டிற்கு சென்று சோதனை செய்து பார்த்த போது 50 கிலோ எடை கொண்ட 154 மூட்டைகள் என மொத்தம் 7,550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சென்னம்மாளை கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பின் பிரிட்ஜ் மேரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் கந்தசுப்பிரமணியன்:-

    பூலையா நாகராஜன் உள்ளிட்டோர் கயத்தாறு-கோவில்பட்டி பைபாஸ் சாலையில் சவலாப்பேரி ஊருக்கு மேற்கு பகுதியில் ஹரிஹரன் என்பவர் தோட்டத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த வெள்ளானகோட்டை கீழத்தெருவை சேர்ந்த உச்சிமாகாளி(வயது 40) என்பவரை பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரிசி மூட்டைகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது 40 கிலோ எடை கொண்ட 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவர் ஏற்பாட்டில் உச்சிமாகாளி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து 3 டன் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா மாநிலத்துக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டி அய்யன் ஆகியோர் புதூர் பாண்டியாபுரம் விலக்கு பாலம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த வானத்தை சோதனை செய்தபோது அதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி பி அன்ட் டி காலனியை சேர்ந்த காந்திசங்கரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்த அஜித்குமாருடன் சேர்ந்து பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அஜித்குமாரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • கன்டெய்னர் பறிமுதல்
    • நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் நாட்டறம்பள்ளி போலீசார் பணி ஆண்ட பட்டுபள்ளி வாலூர் அருகே நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கன்டெய்னர் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால் போலீசாரை கண்டதும் கன்டெய்னரில் இருந்த டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை சோதனை செய்தனர்.

    அதில் மூட்டை மூட்டையாக 10 டன் ரேசன் அரிசி இருந்தது.

    அதனை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் ரேசன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த அதிகாரிகள்
    • 2 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு சென்றது

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே சுங்கான்கடை பகுதியில் இன்று அதிகாலையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு வந்த மினி லாரியை அதிகாரிகள் கைகாட்டி நிறுத்தினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் அந்த வாகனத்தினை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றதும் அந்த வாகனத்தினை டிரைவர் சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

    பின்னர் மினி லாரியை சோதனை செய்ததில் அதில் சுமார் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தக்கலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது டிரைவர் தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்து அந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

    முதற்கட்ட விசாரணை யில் 2 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு சென்றது என தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார்விளை அரசு கிட்டங்கியில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

    • ஆந்திராவில் இருந்து 42 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 2600 டன் ரேசன் அரிசி
    • ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேசன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து 42 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 2600 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது.

    ரெயில் நிலையத்திற்கு வந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
    • சரவணன் என்பவர் ரேஷன் அட்டைதாரர்களிடம் ரேஷன் அரிசி, குருணை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பஸ் ஸ்டாப் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி, 450 கிலோ குருணை அரிசி என மொத்தம் 950 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாப்பாநாட்டை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவர் ரேஷன் அட்டைதாரர்களிடம் ரேஷன் அரிசி, குருணை விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலா 450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    • கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாைலயோரம் கேட்பாரற்று 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது.
    • உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர்பிரபு பறிமுதல் செய்து ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாைலயோரம் கேட்பாரற்று 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது. இதனை உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர்பிரபு பறிமுதல் செய்து ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 21 வேகன்களில் சரக்கு ரெயிலில் 1250 டன் ரேஷன் அரிசி
    • தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப் படுகிறது. ஆந்திராவில் இருந்து 21 வேகன்களில் சரக்கு ரெயிலில் 1250 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    சரக்கு ரெயிலில் இருந்து ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அரிசி அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    • வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
    • அந்த ஆட்டோவை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்

    கன்னியாகுமரி :

    தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி மற்றும் மண்எண்ணை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் ஊழியர் ஜோதிஷ்குமார்  தலைமையிலான  குழு  குழித்துறை  பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். 

    அப்போது சந்தேகப்படும் படியாக  ஆட்டோ ஒன்று  வந்துக்  கொண்டிருந்தது.  அந்த ஆட்டோவை நிறுத்து மாறு சைகை காட்டினர்.  ஆனால் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்றது. உடனே அதிகாரிகள் குழுவினர் அந்த ஆட்டோவை சுமார்  3 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று  மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் வைத்து  மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். 

    ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.   இந்த ரேசன் அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. அதிகாரிகள்   ஆட்டோ வில்  இருந்து கைப்பற்றப் பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர் வோர் வாணிப கிடங்கிலும், கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட  ஆட்டோவை வட்டாச்சியர் அலுவல கத்திலும் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடை பெற்று வருகிறது.

    • ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
    • ரேசன் அரிசியை அதிகாரிகள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களிலிருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து 21 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 1250 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை அதிகாரிகள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • விருதுநகரில் 750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது சம்பந்தமாக டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது, 750 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய கோவில்பட்டியை சேர்ந்த கொம்பையா, மந்திரமூர்த்தி, டிரைவர் செல்லத்துரை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • இரு மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்கணிப்பை தீவிரம்
    • டி.ஆர்.ஓ. தலைமையில் நடந்தது

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு,ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகை

    யில் எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகளை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு ள்ளது.

    அதன்படி உணவு கடத்தல் தடுப்புபிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார், எஸ். பி பாஸ்ரன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டி.எஸ்.பி. முத்துக்குமார் மேற்பார்வை வில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவ்வப்போது ரேசன் அரிசி கடத்தல்வாகனங்கள் சிக்கி வருகின்றன.

    போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கூட, கடத்தல்காரர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தொழிலை செய்து வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்தும்வ கையில் இரு மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண் கணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குமரி-கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோ சனை கூட்டம், மாவட்ட வருவாய் அதி காரி சிவப்பிரியாதலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) ஹரிதாஸ், உணவுகடத்தல் தடுப்புபிரிவு டி.எஸ்.பி.முத் துக்குமார், குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் பாறசாலை போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    இதில் இரு மாநில போலீசார் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தப்பி செல் லும்வாகனங்களை மீட்டு கொண்டு வருவது, குற்ற வாளிகளை கைது செய் வது உள்ளிட்டநடவடிக் கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன.

    ×