என் மலர்
உள்ளூர் செய்திகள்

10 டன் ரேசன் அரிசி கடத்தல்
- கன்டெய்னர் பறிமுதல்
- நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் நாட்டறம்பள்ளி போலீசார் பணி ஆண்ட பட்டுபள்ளி வாலூர் அருகே நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கன்டெய்னர் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.
ஆனால் போலீசாரை கண்டதும் கன்டெய்னரில் இருந்த டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை சோதனை செய்தனர்.
அதில் மூட்டை மூட்டையாக 10 டன் ரேசன் அரிசி இருந்தது.
அதனை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் ரேசன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.






