search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம நவமி"

    • ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.
    • மோதலின் போது சிலர் வாகனங்களுக்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

    இந்த மோதலின் போது சிலர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். மேலும் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்க போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ராம நவமி பேரணியில் மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடந்தது.
    • சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்தம் மற்றும் தேன் அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    தருமபுரி,

    ராம நவமியை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து தருமபுரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு பால் அபிஷேகம், குங்குமம் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்தம் மற்றும் தேன் அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    பின்னர் ஆஞ்சநேயருக்கு வடமாலை வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயர் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • மதுரை ராம நவமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    ராமபிரான் அவதரித்த தாக நாளாக கருதப்படும் ராமநவமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்க குறிப்புகளின் படி நவமி திதி என்பது நேற்று 29-ந் தேதி இரவு 11.49 மணிக்கு தொடங்கி நாளை (31-ந் தேதி) அதி காலை 1.40 மணி வரை ஆகும்.

    நாடு முழுவதும் ராமநவமி வழிபாடு இன்று நடந்தது. ஜோதிட சாஸ்திரப்படி ராமர் பிறப்பதற்கு முன்பு உள்ள 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும், அதன் பிறகு வரும் 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுசரிக்கப் பட்டு வருகிறது. அதாவது சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள 9 நாள் 'கர்ப்போஸ்தவம்' விரத காலமாகும். அடுத்த படியாக சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதி யில் இருந்து அடுத்து வரும் 9 நாட்கள் 'ஜன்மோதீஸவம்' விரத காலமாகும்.

    ராமநவமியின்போது காலை முதல் உணவு அருந்தாமல் விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்ச நேயரின் அருள் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த வர்கள் ஒன்று சேருவர். குடும்ப நலம் பெருகி, வறுமை, பிணி அகலும் என்பது நம்பிக்கை.

    இன்று ராமநவமியை யொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதி கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், மதனகோபால சுவாமி கோவில், மணி நகரம் இஸ்கான் கோவில் கூடலழகர் பெருமாள் கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில், ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், மதுரை மேலமடை தாசில்தார் நகர் சவுபாக்கியா கோவில், சோழவந்தான் சந்தானகிருஷ்ணன் கோபால்சாமி கோவில், திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ராமநவமி விழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி விழா இன்று கொண்டா டப்படுகிறது. இன்று கோவில் கொடிமரத்தின் முன்பு ராமர், சீதை, லட்சுமணன், அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருமஞ்சனம் நடந்தது. லட்சுமி நாராயணர், சஞ்சீவி ஆஞ்ச நேயர், யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும்.
    • நாளை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் நடக்கிறது.

    திருமலையில் ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2 நாட்களுக்கு திருவிழா நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்பட்டது.

    இதை யொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களான சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமலையில் அனுமன் வாகனத்தில், ஸ்ரீராமர் அலங்காரத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து இரவு ராம நவமி ஆஸ்தானம் கடைபிடிக்கப்படும். நாளை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம் கோவில் தங்க வாசல் அருகே நடைபெற உள்ளது.

    ×