search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜாக்கமங்கலம்"

    • ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு
    • ட்ரான்ஸ்பார்மர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

    கன்னியாகுமரி:

    தென் தாமரை குளம் அருகே பொத்தையடியை சேர்ந்தவர் முருகன் (வயது 47), லாரி டிரைவர். இவர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் நேற்று பேயோட்டிலிருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப்பாடு இழந்த முருகன் ராஜாக்க மங்கலம் அருகே எம்.ஜி.ஆர். நகர் வரும்போது அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார். பலியான முருகனுக்கு அகிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    • இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
    • ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலூர் வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் ஐயப்பன் ஆசாரி மகன் சுனில்குமார் (வயது 46). இவர் நகை தொழில் செய்து வந்தார். இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று, இவரது மனைவி சாந்தி இவரை வேலைக்கு செல்ல வலியு றுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுனில்குமார் அவரை தள்ளி விட்டு அறைக்குள் சென்று மனைவியின் சேலையால் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    இதுகுறித்து சாந்தி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 32). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவரஞ்சனி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வரதராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    இதுபற்றி ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று வீடு திரும்பும்போது பரிதாபம்

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 60).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கி ருந்து வீட்டுக்கு புறப்பட்டார். கல்லுக்கட்டி அருகே வரும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.

    எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் பீர் முகமது மற்றும் மற்றோரு மோட்டார் சைக்கிளில் வந்த தேங்காய் பட்டினத்தை சேர்ந்த லிபின்(24),மருதம் கோட்டை சேர்ந்த ஜிஜோ (22) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீர்முகமது பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராபியா, ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே கார விளையை சேர்ந்த ஞானபால் மகன் சதீஷ் (வயது 18). சதீஷ் தற்போது 12ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டின் பின்னால் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜாக்கங்க மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • ராஜக்க மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி நடுவூரில் ஈஸ்வரி பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் மாதம் ஒருமுறை செவ்வாய்க் கிழமை வழிபாடும் மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக கோவில் திறக்கப்படுவது வழக்கம்.

    நேற்று இது போன்று கோவில் திறக்கப்படும் போது கருவறையில் உள்ள கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஊர் நிர்வாகிகளுக்கு பக்தர்கள் தகவல் தெரிவித்தனர்.

    நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து நிர்வாகி ஸ்ரீதர் தலைமையில் ராஜாக்கங்க மங்கலம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் ராஜக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கீழசங்கரன்குழியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தையல் பயிற்சி வகுப்பு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • கட்டிடத்திற்கு மேல சங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் அடிக்கல் நாட்டினார்

    கன்னியாகுமரி:


    ராஜாக்கமங்கலம் அருகே கீழசங்கரன்குழியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தையல் பயிற்சி வகுப்பு கட்டிடத்திற்கு மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் அடிக்கல் நாட்டினார்.


    விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், உறுப்பினர்கள் ராமசாமி, ராதிகா, மற்றும் ஈஸ்வர பிரசாத், ஊராட்சி பாரதிய ஜனதா தலைவர் ரமேஷ் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கன்னியாகுமரி : 


    ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


    வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயல் தலைவர் சகாய பிரவீன் தலைமை வகித்தார் நாகர்கோவில் சட்டமன்ற செயல் தலைவர் சுதன் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நரேந்திர தேவ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆல்வின், சேவியர், பிரேம்குமார் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், வட்டார காங்கிரஸ் தலைவர் வைகுண்ட தாஸ் மாநில காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ×