search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷியா உக்ரைன் போர்"

    • உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • ஹெலிகாப்டர் பாகம் தீப்பிடித்து வானத்தில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியது. உக்ரைன் ராணுவமும் கடுமையாக போரிட்டு வருகிறது.

    இந்த நிலையில் ரஷியாவின் ஹெலிகாப்டர், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் எல்லையையொட்டியுள்ள தெற்கு ரஷிய பிராந்தியத்தின் பிரையன்ஸ்க் பகுதியில் ரஷிய ஹெலிகாப்டர் (எம்.ஐ.-8), சு-35 போர் விமானம் மற்றும் சு-34 போர் விமானம் ஆகியவை பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நடந்தது. பிரையன்ஸ்க் பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறும்போது கிளிண்ட்சி நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 5 வீடுகள் சேதமடைந்தன. ஒரு பெண், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

    இதற்கிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா பகுதியில் அதிகாரியான விளாடிமிர் ரோகோவ் கூறும்போது, 'நான்கு ரஷிய விமானங்கள் வானத்தில் இருந்து சுடப்பட்டது.

    ஹெலிகாப்டர்கள் மற்றும் சு-34 விமானத்தில் இருந்த வீரர்கள் உயிரிழந்தனர் என்றார். இதை உக்ரைன் தரப்பும் உறுதி படுத்தியது.

    உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறும் போது, ரஷியர்கள் இன்று மிகவும் வருத்தமடைந்துள்ளனர். அவற்றை நாம் புரிந்து கொள்ளமுடியும். இரண்டு ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு போர் விமானங்கள் குறைந்துள்ளன என்றார்.

    இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே ஹெலிகாப்டர் பாகம் தீப்பிடித்து வானத்தில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    80 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது கடந்த 5 மாதத்தில் ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக கணித்துள்ளோம். பக்முத் வழியாக டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தும் ரஷியாவின் முயற்சி தோல்வி அடைந்தது ரஷ்யாவால் முக்கியத்துவம் வாய்ந்த எந்த பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது.
    • 80 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது. குறிப்பாக கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷிய படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இத்தாக்குதலில் குழந்தை உள்பட 8 பேர் பலியானார்கள். 21 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே டொனெட்ஸ்த் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பகுதியான பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதியில் 80 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதின் பல இடங்களில் ஒரே மாதிரியான அலுவலகங்களை அமைத்து உள்ளார்.
    • தான் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க அவர் பெரும்பாலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார்

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி ஓரு ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்த போரால் ரஷிய அதிபர் விளாடிமின் புதினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அவர் தற்போது உயிருக்கு பயந்து ரகசிய வாழ்க்கை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தான் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் அவர் தற்போது பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு உள்ளார்.

    தான் செல்லும் பாதை தெரியாத அளவுக்கு புதினின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் ரகசிய ரெயில் பயணம் செய்து வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி க்ளெவ் கரகுலேவ் தெரிவித்து உள்ளார்.

    விமானத்தை விட பாதுகாப்பு அதிகம் என்பதால் சிறப்பு கவச ரெயிலில் அவர் பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை 180-க்கும் மேற்பட்ட பயணங்களை அவர் மேற்கொண்டதாக தெரிகிறது. புதின் பல இடங்களில் ஒரே மாதிரியான அலுவலகங்களை அமைத்து உள்ளார்.

    தான் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க அவர் பெரும்பாலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார். செல்போனை பயன்படுத்தினால் அவர் இருக்கும் இடம் எளிதாக தெரிந்து விடும் என்பதால் புதின் அதனை பயன்படுத்துவது இல்லை. பல நேரங்களில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொள்கிறார். அவர் எங்கு பயணம் சென்றாலும் அவருடன் பாதுகாவலர்கள், உணவு பரிசோதகர்கள்,மற்றும் என்ஜீனியர்கள் உடன் செல்கிறார்கள்.

    தனக்கு நெருங்கியவர்களுடன் மட்டும் தான் அவ்வப்போது தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    எங்கள் அதிபர் போர் குற்றவாளியாகி விட்டார். இதனால் பெரும்பாலான நேரத்தை கஜகஸ்தானில் உள்ள ரஷிய தூதரகத்தில் பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதிகளுடன் பதுங்கு குழியில் செலவிடுதாகவும் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

    • நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து நாடு நடவடிக்கைகளை எடுத்தது.
    • பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    மாஸ்கோ:

    அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷியா அந்நாடு மீது போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

    இதற்கிடையே நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து நாடு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பில் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்தது.

    பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்சில் நடந்த விழாவில் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டது. இதன்மூலம் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் ரஷியா பகிரும் எல்லை இரட்டிப்பாகி உள்ளது.

    பின்லாந்து, ரஷியாவுடன் 1340 கி.மீ கிழக்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளதால் நேட்டோ படைகள் தேவைப்பட்டால் பின்லாந்து எல்லைக்கு அனுப்பப்படலாம்.

    இது ரஷியாவுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறது. நேட்டோவில் பின்லாந்து இணைந்ததற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு கூறும் போது, 'பின்லாந்தை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டதால் உக்ரைன் போர் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    பெலாரஸ் நாட்டின் போர் விமானங்கள் எங்களது அணு ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல் நடத்தும் வகையில் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார்.

    இதன்மூலம் பின்லாந்து மீது ரஷியா போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகள் தீவிரமாக உள்ள நிலையில் பின்லாந்து மீதும் தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும் பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
    • கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது.

    இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் ராணுவ வீரர்களை குறி வைத்து ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.

    கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் துருக்கியிடம் பெறப்பட்ட கவச வாகனங்கள் உள்பட உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான ஏராளமான ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உக்ரைன் உடனடியாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உக்ரைனுடனான போரின் போது ரஷிய வீரர்கள் ஆயுதங்களை மோசமாக கையாண்டதாலும் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டதாலும் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரஷிய வீரர்கள் அதிகப்படியான மது அருந்தியதாலும் உயிரிழப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சாலை விபத்துகள், தாழ் வெப்ப நிலை போன்றவைகளாலும் உக்ரைன் வீரர்களின் தாக்குதலாலும் பலர் உயிரிழந் திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷியா தனது ராணுவ வீரர்களின் இறப்பு குறித்து ஆரம்பத்தில் இருந்தே சரியான புள்ளிவிவர கணக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.
    • உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் நோட்டோ அமைப்பில் உள்ள முதல் நாடு போலந்து ஆகும்.

    வார்சா:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு நான்கு மிக்-29 போர் விமானங்களை வழங்குவதாக போலந்து அறிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் நோட்டோ அமைப்பில் உள்ள முதல் நாடு போலந்து ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
    • உக்ரைனை எப்படியும் பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னபின்னமாகி வாழ்வதற்கே தகுதியற்ற நிலை உருவாகி இருக்கிறது.

    பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் ரஷியா தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. உக்ரைனை எப்படியும் பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய அதிபர் புதின் கொல்லப்படுவார் என்ற பரபரப்பான தகவலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    உக்ரைன் போர் காரணமாக புதின் மீது அவருக்கு நெருக்கமானவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

    பதவியில் இருக்கும் போது அவருக்கு ஒரு பலவீனமான காலம் வரும். இந்த தருணத்தின் போது புதினுக்கு நெருக்கமானவர்களால் அவர் கொல்லப்படலாம். இது நிச்சயம் நடக்கும். ஆனால் அது எப்போது நடக்கும் என்பது பற்றி தெரியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஜெலன்ஸ்கி கருத்துக்கு அரசியல் நோக்கர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். புதின் தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்து உள்ளார். இதனால் ஜெலன்ஸ்கி சொல்வது சாத்தியம் இல்லை என்று அவர்கள் கூறி உள்ளனர்.

    • உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது.
    • ரஷியா மீதான உக்ரைன் தாக்குதல் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது. ரஷியாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க உக்ரைன் கடும் போர் புரிந்து வருகிறது.

    பல மாதங்கள் ஆனபின்பும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    இதற்கிடையே அமெரிக்க அரசு உக்ரைனுக்கு 2.17 பில்லியன் அளவுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. இந்த உதவியின் போது தங்களுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்க வேண்டும் என உக்ரைன் கோரி இருந்தது.

    முதலில் இதனை வழங்க தயக்கம் காட்டிய அமெரிக்கா இப்போது, அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளது.

    ஏற்கனவே அறிவித்தபடி உக்ரைனுக்கு வழங்க உள்ள ஆயுதங்களில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், டாங்கிகள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளது.

    இதன்மூலம் இனி ரஷியா மீதான உக்ரைன் தாக்குதல் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
    • இருவரும் போரில் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

    லண்டன்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு, லட்சக்கணக்கான மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக செய்துள்ளது. கல்வி, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக உக்ரைனுக்கு சென்ற வெளிநாட்டினர் பெரும்பாலானோர் போர் தொடங்கியதும் அங்கிருந்து வெளியேறினர். அதே சமயம் வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இரு தன்னார்வ உதவி ஊழியர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உக்ரைனில் தன்னார்வ பணிகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இவர்கள் இருவரும் போர் முனையில் சிக்கும் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளை செய்து வந்தனர். அந்த வகையில் கிழக்கு உக்ரைனின் சோலேடார் நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கிறிஸ் பாரி, ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இருவரும் கடந்த 6-ந் தேதி திடீரென மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அவர்கள் இருவரும் போரில் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன. சோலேடார் நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களது கார் மீது பீரங்கி குண்டு வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் இங்கிலாந்து குடிமக்கள் யாரும் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளது.

    • செல்போன் சிக்னல் மூலம் வீரர்களின் இருப்பிடத்தின் தொலைவுகளை எதிரிகள் கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர்
    • ஏவுகணை தாக்குதலில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷிய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷிய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 89 ரஷிய வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட அதி நவீன ஹிம்ராஸ் ரக ஏவுதள வாடம் மூலம் அந்த ஏவுகணைகள் வீசப்பட்டு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் தாக்குதலில் ரஷிய வீரர்கள் பலியானதை ரஷியாவும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் ரஷிய வீரர்கள் செல்போன்களை பயன் படுத்தியதால் அதன் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும் போது, உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் 89 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தியதே முக்கிய காரணமாக அமைந்து விட்டது. செல்போன் சிக்னல் மூலம் வீரர்களின் இருப்பிடத்தின் தொலைவுகளை எதிரிகள் கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர் என்றனர்.

    இந்த ஏவுகணை தாக்குதலில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

    • உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு, பிரான்ஸ் அமைச்சர் பயணம்
    • ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் ஆயுதங்களை வாங்க, பிரான்ஸ் உதவி

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இதை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு, தமது பயணத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ளார்.

    அப்போது, உக்ரைனுக்கு மேலும் ராணுவ ரீதியான ஆதரவை பிரான்ஸ் தொடர்ந்து வழங்கும் என்று அவர் அறிவித்தார். பிரான்ஸ் வழங்கும் 200 மில்லியன் யூரோ மதிப்பிலான நிதியுதவி மூலம், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் ஆயுதங்களை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், மேலும் உக்ரைன் ராணுவத்திற்கு, பிரான்ஸ் ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×