search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசிகர்கள்"

    • மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது.
    • 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர்.

    இஸ்தான்புல்:

    கிளப் அணிக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் துருக்கியின் இஸ்லான்புல் நகரில் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் 68-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரோட்ரி கோல் போட்டார். அதுவே வெற்றிக்கும் வித்திட்டது.

    முடிவில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சீசனில் பிரிமீயர் லீக், எப்.ஏ. கோப்பையை சுவைத்த மான்செஸ்டர் சிட்டிக்கு இது 3-வது மகுடமாக அமைந்தது.

    இந்நிலையில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது.
    • நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான டிக்கெட்டுகளும் ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகளும் கவுண்ட்டரிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் கணிசமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர். கட்டுகடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

    • விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
    • 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.

    ஆத்தூர்:

    கடந்த பொங்கல் பண்டிகையை யொட்டி, ஜனவரி மாதம் 11-ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

    இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட ஆத்தூரில் உள்ள கேசவன், என்.எஸ், பத்மாலயா, பிரியாலயா, விஸ்வநாத் ஆகிய 5 திரை யரங்கு உரிமையாளர்க ளிடம் விளக்கம் கேட்டப் பட்டது. ஆனால் திரைய ரங்கு உரிமை யாளர்கள் முறையாக பதில் அளிக்காததால், இந்த 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த நிலையில் இன்று வழக்கம்போல் 5 திரையரங்குகளிலும் காலை காட்சிக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுத்து திரை யரங்கில் அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தாசில்தார் தலைமைலான அதிகாரிகள், உடனடியாக படத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டு, திரையரங்கில் இருந்த ரசிகர்களை வெளி யேற்றினர். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியே சென்றனர்.

    • போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
    • காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியை காண வரும்.ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழக்கப்பட்டுள்ளது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.
    • டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் நேற்று இரவு முதலே குவிந்து இருந்தனர். அவர்கள் கூறியதாவது:-

    மகேஷ், சாந்தகுமார், பரணி (காஞ்சீபுரம்):-நாங்கள் காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று மாலையே இங்கு வந்துவிட்டோம். அப்போது கவுண்டர் பகுதியில் தடுப்பு வேலி கூட அமைக்கவில்லை. அதன் பிறகுதான் அமைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடப்பதால் அதை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளோம். ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்துவிட்டது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்று நேற்று மாலையிலேயே வந்துவிட்டோம்.

    முரளி (சென்னை):-நான், நண்பர்கள் 7 பேருடன் டிக்கெட் வாங்க வந்தேன். இப்போட்டியை பார்க்க உற்சாகத்துடன் இருக்கிறோம். நள்ளிரவு முதலே இங்கு தூங்காமல் காத்திருந்தோம். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதுதான் முக்கியம். கண்டிப்பாக இந்தியா ஜெயிக்கும்.

    ராஜசேகர்-புவனேஸ்வரி தம்பதி (நாவலூர்):-இன்று அதிகாலை 4.30 மணிக்கு நாவலூரில் இருந்து இங்கு வந்தோம். காலை 5.30 மணிக்கு இங்கு வந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

    ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் வழங்கப்படுவதால் நாங்கள் இருவரும் டிக்கெட் வாங்க வந்தோம். எங்களுக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.

    முல்லைவேந்தன் (சோழிங்கநல்லூர்):-நான் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேப்பாக்கத்தில் போட்டி நடப்பதால் அதை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்தது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்க வந்தேன். டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

    • தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பல இடங்களிலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த போர்டு முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு தற்போது உலக அளவில் பரவி புகழ்பெற்று விளங்குகிறது. கத்தார் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பல ரசிகர்கள் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகையை காண்பித்தவாறு போட்டியை ரசித்து வருகின்றனர்.

    தினந்தோறும் நடக்கும் போட்டியில் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகை தென்படுவதை நம்மால் காண முடிகிறது.

    என் மூலம் தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

    ×