search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ"

    • நாளை முதல் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் நாளை முதல் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும், காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • பொது இடங்களில் பயணிகள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
    • ஒரு பயனர், நாளை நான் எனது தாடி டிரிம்மரை எடுத்து வருவேன் என பதிவு செய்துள்ளார்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் அத்துமீறல் வீடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலைதளங்களில் வைரலாகி இருந்தன. ரெயிலுக்குள் கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஜோடி, கவர்ச்சி உடையில் வந்த இளம்பெண், ஆபாச சேட்டையில் ஈடுபட்ட வாலிபர் போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

    அதில், பொது இடங்களில் பயணிகள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்பெண் தனது தலைமுடியை நேராக்குவதை போன்ற காட்சிகள் உள்ளது.

    மெட்ரோ ரெயிலில் பயணிகள் தங்களது செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு வசதியாக மின் இணைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதில் அந்த இளம்பெண் ஒரு கருவியை பொருத்தி அதன் மூலம் தனது தலை முடியை நேராக்குவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த இளம்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், நாளை நான் எனது தாடி டிரிம்மரை எடுத்து வருவேன் என பதிவு செய்துள்ளார்.

    • மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
    • மெட்ரோவில் தினமும் காலை 5 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் இடைேய, மெட்ரோ தடத்தில், அலுவலக நேரத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும், மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது.

    அதே போல் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே அலுவலக நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில், மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. மெட்ரோவில் தினமும் காலை 5 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

    ஆனால் சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. எனவே தற்போது உள்ள மெட்ரோ ரெயில் சேவையை நள்ளிரவு 12 மணிவரை நீடித்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இச்சேவையை நள்ளிரவு வரை நீட்டித்து இயக்குவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

    • மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
    • சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும் நல்லது என்றார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோரெயில் திட்டம் கொண்டு வந்தது நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சமூக ஆர்வலரும், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான சண்முகசுந்தரம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவிற்கே வழிகாட்டு கிற கலங்கரை விளக்கமாக அமைந்தி ருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசு நிதி பற்றாக்குறையை ரூ.62கோடியில் இருந்து ரூ.30கோடியாக குறைத்தி ருப்பது மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமைக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதி மேலாண்மைக்கும் சான்றாக அமைந்துள்ளது.

    மதுரை மாநகரை சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும், அதன் முதல்கட்டமாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதும் மதுரை மக்களிடம் கோடை மழையை போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோன்று ஏழை, எளிய மக்கள் நிலம் வாங்குவதற்கு ஏதுவாக பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலமாக ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×