என் மலர்
நீங்கள் தேடியது "deepa shankar"
- உயிர் மூச்சு திரைப்படம் இன்று வெளியானது
- உயிர் மூச்சு திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது..
பிராட்வே சுந்தர் இயக்கத்தில் தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், டெலிபோன் ராஜ், பெஞ்சமின்,விக்னேஷ்,சஹானா ஆகியோர் நடித்த உயிர் மூச்சு திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது..
முதலுதவி பற்றிய மையக்கருத்துடன் வரதட்சணை கொடுமை, லஞ்சம் ஊழல், மதுபோதையால் ஏற்படும் சீரழிவு பற்றிய கதை களத்துடன்., தமிழ் திரை உலகில் முதன் முதலில் வில்லனாக அறிமுகமாகும் டெலிபோன் ராஜின் வில்லத்தனத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் உயிர் மூச்சு திரைப்படம் தியேட்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகிறது...
இது பற்றி நடிகர் மீசை ராஜேந்திரன் கூறும் போது..
நான் இதுவரை ஏற்காத புதிய வேடத்தில் உயிர் மூச்சு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.. நடிகை தீபாவின் நீதிமன்ற காட்சி வரும்போது நான் என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன் அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்..
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கதையை அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி எழுதியிருக்கிறார்., தற்போது கோடைகால விடுமுறையில் பெரிய நடிகர்களின் படங்கள் பல வருவதால் நல்ல கதை அம்சம் கொண்ட உயிர் மூச்சு திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.. விரைவில் தமிழகமெங்கும் இந்த திரைப்படத்திற்கு தியேட்டரில் அதிகரிக்கும் என நம்புகிறேன் என்று கூறினார்..
இந்த திரைப்படத்தை இயக்கிய பிராட்வே சுந்தர் ஏற்கனவே அரசியல் சதுரங்கம், விதி எண் 3, கருப்பு பக்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
- இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.
'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






