search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Metro Train"

    • தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் பெண் பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.
    • பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    பொதுவாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிகவும் தூய்மையாக இருக்கும். அங்கு பயணிகளும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் சென்ற போது ஒரு வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக ரிஷிகா குப்தா என்ற பெண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் ரிஷிகா தனது பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.

    அதில், அந்த வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக குறிப்பிட்டு இந்த வகையான மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஒருவர் எவ்வளவு அழுக்காக இருக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் தனது செயலுக்காக வருத்தப்படவில்லை. அவரை போன்ற ஒரு வாலிபரை எந்த பெண்ணும் சந்திக்க கூடாது என ஆவேசமாக பதிவிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • சமீப காலமாக இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்புக்கு பலியாகி வருகின்றனர்.
    • டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணித்த 26 வயது டாக்டர் மாரடைப்பால் இறந்தார்.

    புதுடெல்லி:

    கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்புகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. சமீப காலங்களில் மாரடைப்புக்கு இளைஞர்கள் அதிக அளவில் பலியாகி வருகின்றனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், தலைநகரில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பல்லப்கரில் இருந்து காஷ்மீர் கேட் வரை பயணித்த 26 வயது டாக்டர் மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான சிக்கலால் ரயிலில் சரிந்து விழுந்தார்.

    திடீரென மயங்கி விழுந்த அவருக்கு மற்றொரு பயணி முதலுதவி சிகிச்சை அளித்தார். டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள மூல்சந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விசாரணையில், அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வசித்து வந்த மயங்க கர்க் என்பதும், மகாராஷ்டிராவின் வார்தாவில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு தேர்வுக்காக பஞ்ச்குலாவுக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் 26 வயது டாக்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது நடன காட்சியை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
    • நடன வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகள் அத்துமீறிய காட்சிகள், காதல் ஜோடிகள் முத்தமழை பொழிந்த வீடியோ போன்றவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சில எச்சரிக்கைகளை வழங்கியது. இந்நிலையில் தற்போது மும்பையில் பயணிகள் ரெயில் ஒன்றில் இளம்பெண் ஒருவர் 'பெல்லி' நடனமாடிய வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது இந்த நடன காட்சியை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடன வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்ளும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை போலீசாரை வலியுறுத்தி சில பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • ‘டெல்லி அரசு பஸ்சில் இருக்கை பிரச்சனையில் இரு பெண்களுக்கிடையே சண்டை’ என்ற தலைப்புடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
    • வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக பயணிகள் இடையே நடைபெற்ற வாக்குவாதம், மோதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

    இந்நிலையில் தற்போது டெல்லி அரசு பஸ்சிலும் இருக்கைக்காக பெண் பயணிகள் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. டுவிட்டரில் வெளியான அந்த வீடியோ 'டெல்லி அரசு பஸ்சில் இருக்கை பிரச்சனையில் இரு பெண்களுக்கிடையே சண்டை' என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. அதில், பெண் பயணி ஒருவர் மற்றொரு பெண் பயணியின் மடியில் அமர்ந்து இருக்கைக்காக சண்டையிடுவதை காண முடிகிறது. இதைப்பார்த்த சக பயணி ஒருவர் அவர்களை தடுக்க முயன்ற போது இருவரும் அதை கண்டுகொள்ளாமல் ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுப்பதும், முகத்தை கீறிக்கொள்ள முயற்சிப்பதுமான காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், இந்த வீடியோவின் ஒளிப்பதிவாளர் விருதுக்கு தகுதியானவர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மற்றொரு பயனர், தண்ணீர் குழாயில் சண்டையிடும் பழைய திறன்கள் எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்கும் என கேலி செய்துள்ளனர்.

    • வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    மெட்ரோ ரெயிலில் ஒரு பெண்ணின் ஜிம்னாஸ்டிக் திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிஷா ஷர்மா என்ற தடகள வீராங்கனை மெட்ரோ ரெயிலில் நெரிசல் குறைந்த இடத்திற்கு செல்வது போன்று காட்சிகள் தொடங்குகிறது. பின்னர் அவர் ரெயில் பெட்டிக்குள் பயணிகள் முன்னிலையில் திடீரென சாமர்சால்ட் பல்டி அடித்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் மிஷா ஷர்மாவின் திறமையை பாராட்டியும், சிலர் உங்கள் திறமையை வெளிப்படுத்த பொருத்தமான இடம் மெட்ரோ அல்ல என்ற கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளனர்.

    இதே போல டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகள் மற்றவர்களுக்கு இடையூறாக எந்த செயலிலும் ஈடுபட்டு வீடியோக்களை எடுக்க வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதையும் மீறி ஒருவர் பிரபல பாடலான சோலி கே பீச்சே க்யா ஹை பாடலுக்கு நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • அநாகரிகமாக நடக்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை செய்தது.
    • ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்ஜோடி பயணிகள் முன்பு மெய்மறந்து முத்தமிட்டு அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் உள்ளது.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளின் நடன காட்சி, வாக்குவாதம், முத்தமழை பொழிந்த காதல் ஜோடி, ஆபாச உடை அணிந்து வந்த பெண் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியான வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இதைத்தொடர்ந்து, மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பயணிகள் பொதுஇடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், அநாகரிகமாக நடக்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக எந்த வீடியோக்களும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்ஜோடி பயணிகள் முன்பு மெய்மறந்து முத்தமிட்டு அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் உள்ளது. டெல்லி மெட்ரோ ரெயிலில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற செயல்களால் பயணிகள் முகம் சுழிக்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், மெட்ரோ நிர்வாகம் எவ்வளவு அறிவுறுத்தினாலும் அதை கண்டுகொள்ளாமல் இவ்வாறு நடக்கும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணைய பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பொது இடங்களில் பயணிகள் நாகரிகமாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
    • வைரலாகி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோவில் 2 இளம்பெண்கள் கம்பத்தை சுற்றி நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளன.

    டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் வாக்குவாதம், ஆபாச சேட்டை, இளம் ஜோடிகளின் முத்தமழை, கவர்ச்சி உடையில் வந்த இளம்பெண்கள் போன்ற பல்வேறு வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

    இது தொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பொது இடங்களில் பயணிகள் நாகரிகமாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து இருந்தது. ஆனாலும் பயணிகள் அதை கண்டு கொள்வதே இல்லை. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோவில் 2 இளம்பெண்கள் கம்பத்தை சுற்றி நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளன.

    இந்தி பாடலுக்கு அந்த பெண்கள் நடனமாடும் வீடியோ ஹஸ்னா ஹை என்ற டுவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ 21 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இது ஒரு புறம் இருக்க மெட்ரோவில் பயணிகளின் இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வீடியோவில் இளம்ஜோடியினர் மெட்ரோவில் நடந்து கொண்ட விதத்திற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகள் உள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    டெல்லி மெட்ரோவில் நடைபெற்ற சில சம்பவங்கள் கடந்த சில நாட்களாக வைரலாகின. மெட்ரோ நிர்வாகம் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும், ரெயிலுக்குள் சில பயணிகள் அநாகரீகமாக நடப்பது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இளம்ஜோடி ஒன்று ரெயிலுக்குள் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த பெண்கள் சிலர் அந்த இளம்ஜோடியை கண்டித்துள்ளனர்.

    அப்போது அந்த ஜோடி, கண்டித்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், இளம்ஜோடியினர் மெட்ரோவில் நடந்து கொண்ட விதத்திற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகள் உள்ளது. ஆனால் அந்த இளம்ஜோடியினரோ தாங்கள் ஆட்சேபனைக்குரிய எதையும் செய்யவில்லை என கூறி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்று காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • பொது இடங்களில் பயணிகள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
    • ஒரு பயனர், நாளை நான் எனது தாடி டிரிம்மரை எடுத்து வருவேன் என பதிவு செய்துள்ளார்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் அத்துமீறல் வீடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலைதளங்களில் வைரலாகி இருந்தன. ரெயிலுக்குள் கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஜோடி, கவர்ச்சி உடையில் வந்த இளம்பெண், ஆபாச சேட்டையில் ஈடுபட்ட வாலிபர் போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

    அதில், பொது இடங்களில் பயணிகள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்பெண் தனது தலைமுடியை நேராக்குவதை போன்ற காட்சிகள் உள்ளது.

    மெட்ரோ ரெயிலில் பயணிகள் தங்களது செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு வசதியாக மின் இணைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதில் அந்த இளம்பெண் ஒரு கருவியை பொருத்தி அதன் மூலம் தனது தலை முடியை நேராக்குவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த இளம்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், நாளை நான் எனது தாடி டிரிம்மரை எடுத்து வருவேன் என பதிவு செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு இளம் ஜோடி முத்த மழை பொழிவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வைரலாக பரவும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சிலர் அந்த ஜோடியை வெட்கமற்றவர்கள் என விமர்சித்துள்ளனர்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்டது, சில பெண்கள் படுகவர்ச்சிகரமாக உடை அணிந்து சென்றது போன்ற வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு இளம் ஜோடி முத்த மழை பொழிவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், மெட்ரோ ரெயிலுக்குள் தரையில் அமர்ந்திருக்கும் ஒரு வாலிபரின் மடியில் படுத்திருக்கும் இளம்பெண்ணை அந்த வாலிபர் முத்தமிட்டு கொண்டே இருக்கிறார். வைரலாக பரவும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சிலர் அந்த ஜோடியை வெட்கமற்றவர்கள் என விமர்சித்துள்ளனர்.

    மேலும் இந்த ஜோடி மீது மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகமும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என கூறி உள்ளது.

    ×