மும்பை ரெயிலில் 'பெல்லி' நடனம் ஆடிய பெண்

சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது நடன காட்சியை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.நடன வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மும்பை ரெயிலில் 'பெல்லி' நடனம் ஆடிய பெண்
Published on

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகள் அத்துமீறிய காட்சிகள், காதல் ஜோடிகள் முத்தமழை பொழிந்த வீடியோ போன்றவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சில எச்சரிக்கைகளை வழங்கியது. இந்நிலையில் தற்போது மும்பையில் பயணிகள் ரெயில் ஒன்றில் இளம்பெண் ஒருவர் 'பெல்லி' நடனமாடிய வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது இந்த நடன காட்சியை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடன வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்ளும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை போலீசாரை வலியுறுத்தி சில பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com