search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சாரரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆவடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது.
    • சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தண்டவாளத்தில் வெள்ளம் வடியாததால் சென்னை சென்ட்ரலில் இருந்து 3-வது நாளாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. மின்சார ரெயில்கள் நேற்று மாலையில் இருந்து இயக்கப்படுகின்றன. பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது.

    எழும்பூர்-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் பெரம்பூர் வழியாக கடற்கரை நிலையம் மூலம் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்க ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகுதான் சென்ட்ரலில் இருந்து முழுமையாக ரெயில்கள் இயக்கப்படும். நாளை முதல் போக்குவரத்து சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்ட்ரல்-மைசூரு வந்த பாரத் ரெயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டன.

    திருப்பதி சப்தகிரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,

    பெங்களூரு-சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சோவை-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்ட்ரல் வந்தே பாரத், கோவை-சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இது தவிர மேலும் 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதே போல சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    • பராமரிப்பு பணி காரணமாக இரவு மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
    • தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை 19-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணியின் காரணமாக இரவு 12.25 முதல் 2.25 வரை 2 மணி நேரத்திற்கு மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை இன்று (8-ந்தேதி), 9, 10, 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை இன்று (8-ந்தேதி), 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை 19-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று 8 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30, 9.15, 10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று (சனிக்கிழமை) 8 ரெயில்களும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 58 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு 10.20, 11.45 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    இதேபோல, நாளை அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு காலை 4 மணி, 5.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சென்னை மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 5 மணி, 5.40, 6.15, 7.45, 8.05, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    மறுமார்க்கமாக திருவள்ளூரிலிருந்து மூர்மார்கெட்டிற்கு காலை 4.45, 5.55, 8.05, 8.20, 8.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு காலை 5.15, 6.20, 7.15, 7.30 ஆகிய நேரங்களில் புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக பட்டாபிராமிலிருந்து மூர்மார்கெட்டிற்கு காலை 5.30, 6.35, 7.40, 8.40, 8.45 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்திற்கு காலை 5.30, மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 5.40, மூர்மார்கெட்டிலிருந்து திருத்தணிக்கு காலை 5.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையிலிருந்து ஆவடிக்கு காலை 6.50, 8.10 மணிக்கு புறப்படும் ரெயில், மறுமார்க்கமாக ஆவடியிலிருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 5.55, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்தாகிறது.

    பயணிகளின் வசதிக்காக நாளை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்திற்கு காலை 6.30, 7 மணி, 8.20, 9.10, 9.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30, 9.15, 10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இரவு 10.10 மணிக்கு வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 10.20 முதல் 11.59 மணி வரை இயக்கப்படும் 5 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    பறக்கும் ரெயில் சேவைக்காக வேளச்சேரி-பரங்கிமலையை இணைப்பதற்காக ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்தப்பணி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதைக்கு மேலே அமைக்கப்படுகிறது.

    இதற்காக உயர்மின் அழுத்த ஒயர்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு பணிகள் நடக்கிறது. அந்தவகையில் நேற்று காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இந்தப்பணி நடந்தது. இதில் 6 இரும்பு பாலங்களில் 3 இரும்பு பாலங்கள் மட்டுமே தூண்களில் பொருத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 3 இரும்பு பாலங்கள் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது.

    இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 10.20 முதல் 11.59 மணி வரை இயக்கப்படும் 5 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இரவு 10.40 மணியில் இருந்து இரவு 11.40 மணி வரை செல்லும் 3 மின்சார ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இரவு 10.10 மணிக்கு வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டு சந்திப்பில் இருந்து இரவு 11 மணிக்கு கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படுகிறது.

    அதேபோல் எழும்பூரில் இருந்து இரவு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 3-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. குறிப்பாக, இரவு 10.55 மணிக்கு புறப்படும் எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்-16179), இரவு 11.15 மணிக்கு புறப்படும் எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (16159), இரவு 11.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்-திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (16179), ஆகிய 3 ரெயில்களும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    அதேபோல் இரவு 11.55 மணிக்கு எழும்பூரில் இருந்து தாம்பரம், விழுப்புரம் வழியாக சேலத்திற்கு இயக்கப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) மாற்றுப்பாதையான எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

    • சென்னை பரங்கிமலை- வேளச்சேரி ரெயில் பாதை இணைப்பு பணி நடைபெற்று வருகிறது.
    • மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    சென்னை :

    சென்னையில் மிகவும் முக்கியமான போக்குவரத்தாக மின்சார ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    இந்நிலையில், சென்னை பரங்கிமலை- வேளச்சேரி ரெயில் பாதை இணைப்பு பணி, தண்டவாள பராமரிப்பு பணிகளால் நாளை முதல் 3 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும் வரும் 3-ந்தேதி வரை தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 மணி முதல் 11.55 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் அனைவரும் வேண்டுமென்றே டிக்கெட் எடுக்காமல் வருபவர்கள் அல்ல.
    • ரெயில் நிலையங்களில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் நின்று தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    சென்னை:

    ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செல்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது பிடித்து அபராதம் விதித்தாலும் ஓசி பயணம் செய்வதில் பலர் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் தென்னக ரெயில்வே 31 டிக்கெட் பரிசோதனை குழுவினர் மூலம் தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனை சென்னை சென்ட்ரல், பெரம்பூர், ஈரோடு, கோவை, எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்டது.

    இதில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 300 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.22.7 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி வரை ரூ.57.48 கோடி அபராத தொகை வசூலாகி உள்ளது. முறையற்ற டிக்கெட்டுகள், லக்கேஜ் கட்டணம் செலுத்தாதது ஆகியவையும் அடங்கும்.

    அபராத வசூலில் சென்னை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ரூ.21.82 கோடி வசூலாகி உள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் ரூ.8.72 கோடியும், பாலக்காடு கோட்டத்தில் ரூ.8.32 கோடியும் வசூலாகி உள்ளது.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் அனைவரும் வேண்டுமென்றே டிக்கெட் எடுக்காமல் வருபவர்கள் அல்ல. அவசர அவசரமாக ரெயிலை பிடிக்க ஓடி வருபவர்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிடிப்பதற்காக அவசர கதியில் வருபவர்களும் உண்டு.

    சென்னை மின்சார ரெயில்களை பொறுத்தவரை வேண்டுமென்றே ஓசி பயணம் மேற்கொள்பவர்களில் மாணவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை டிக்கெட் எடுக்காமல் பிடிபடும் வரை பயணிப்பது என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்கள். இது தவறு என்று உணர்வதில்லை. அவர்களை பொறுத்தவரை படிக்கட்டுகளில் நிற்பார்கள். டிக்கெட் பரிசோதகர்களை பார்த்ததும் இறங்கி அடுத்த பெட்டிகளுக்கு தாவுகிறார்கள்.

    இதனால் இப்போது ரெயில் நிலையங்களில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் நின்று தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

    • பேசின்பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் வியாசா்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 14 புறநகா் மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
    • திருத்தணிக்கும், திருவள்ளூருக்கும் செல்லும் மின்சார ரெயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு - வியாசா்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணி முதல் மறு நாள் காலை 6.30 மணி வரை 7 மணிநேரம் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே அந்த 7 மணி நேரத்துக்கு பேசின்பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் வியாசா்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 14 புறநகா் மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

    அதே போல் இன்று இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்தும், இரவு 9.45 மணிக்கு திருத்தணியில் இருந்தும் சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ஆவடியுடன் நிறுத்தப்படும். மேலும் நாளை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு திருத்தணிக்கும், அதிகாலை 5 மணிக்கு திருவள்ளூருக்கும் செல்லும் மின்சார ரெயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சார ரெயில் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகளும் நடைபெறும்.
    • நாளை சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிறுப்பதாவது:-

    காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை போல் இயக்கப்படும்.

    சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - சூளூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகளும் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில் இயக்கம் முதல் அனைத்து சேவைகளையும் கையகப்படுத்துவது தொடர்பாக வணிக திட்ட அறிக்கை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பறக்கும் ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரெயில் நிலையங்கள் போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கோரியுள்ளது.

    ரெயில் இயக்கம் முதல் அனைத்து சேவைகளையும் கையகப்படுத்துவது தொடர்பாக வணிக திட்ட அறிக்கை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பறக்கும் ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரெயில் நிலையங்கள் போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.

    மேலும், இந்த வழித்தடத்தில் உள்ள மந்தைவெளி, பெருங்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    • தண்டவாள பகுதிகளில் ராட்சத கிரேன் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • பணிகள் தொடங்கிய பிறகே ரெயில் சேவையில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்கிற முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்குவதை தடுப்பதற்காக வெள்ளத் தடுப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதே நேரத்தில் ரெயில் நிலைய பாலங்களையொட்டிய பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சனைகளால் மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதில் சவால்கள் இருந்து வந்தன. ரெயில்வே தண்டவாளங்களின் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக திட்டமிடப்பட்டிருந்தது.

    இதற்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டன. இந்த இடங்களில் தண்டவாளத்துக்கு கீழே மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது எப்படி? என்கிற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகளை தொடங்குவதற்கு ரெயில்வே நிர்வாகத்துடன் உரிய முன் அனுமதி பெற வேண்டியது இருந்ததால் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ரெயில்வே நிர்வாகத்துடன் பேசி தண்டவாளத்துக்கு கீழ் மழைநீர் வடிகால் பணிகளை அமைப்பது தொடர்பான அனுமதியை கேட்டுப்பெற்றுள்ளனர்.

    இதன்படி எழும்பூர் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் ஒருபுறத்தில் இருந்து இன்னொரு புறத்திற்கு மழைநீரை கொண்டு செல்வதற்கான வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    இந்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். இதை தொடர்ந்து இந்த பணிகள் தொடங்கி தொடர்ச்சியாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.

    எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள காந்தி இர்வின் சாலை பாலம் பகுதியில் தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பகுதியில் சுற்றியுள்ள இடங்களில் பணிகள் 90 சதவீத அளவுக்கு முடிவடைந்துள்ளன. தண்டவாளத்தின் குறுக்கே சுமார் 50 மீட்டரில் தூர்வாரும் கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.

    இந்த பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. மழை வெள்ளப் பாதிப்பை தடுக்க கட் மற்றும் கவர் என்கிற தொழில்நுட்ப முறையில் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மழைநீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காணப்படும்.

    இதற்காக தண்டவாள பகுதிகளில் ராட்சத கிரேன் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கடற்கரை மின்சார ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கடற்கரையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில்கள் பணிகள் தொடங்கி முடியும் வரை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை மின்சாரம் ரெயில் சேவை தடைபட உள்ளது.

    அதே போன்று எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகமும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் 6 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படும்.

    இதே போன்று கணேச புரம் பகுதியிலும் தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியிலும் ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டு ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட உள்ளது.

    புறநகர் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் தடைபட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் இந்த பணிகள் தொடங்கிய பிறகே ரெயில் சேவையில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்கிற முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • திருவள்ளூர்- சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 11.10 மணிக்கும், பகல் 12.35 மணிக்கும் இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரக்கோணம் ரெயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தால் நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே இயங்கும் 9 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு மாற்றாக பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதியில் சென்னை சென்ட்ரல் புறநகர்- கடம்பத்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 8.20 மணிக்கும், காலை 11 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக கடம்பத்தூர்-சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 10.25 மணிக்கும், காலை 11.35 மணிக்கும், பிற்பகல் 1.25 மணிக்கு இயக்கப்படும்.

    அதேபோல் சென்னை சென்ட்ரல் புறநகர்-திருவள்ளூர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 9.10 மணிக்கும், காலை 10 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவள்ளூர்- சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 11.10 மணிக்கும், பகல் 12.35 மணிக்கும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×