search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினிபஸ்"

    • நிறுத்தப்பட்ட மின்பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடி பஸ்நிலையத்தில் இருந்து தினந்தோறும் மொத்தம் 177 பஸ்கள் இயங்கி வருகிறது.இதில் 14 மினி பஸ்கள் ஆகும். ஆவடியில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அம்பத்தூர், பாரிமுனை,பல்லாவரம், ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆவடியில் இருந்து பெரும்பாலான பஸ்போக்குவரத்து குறைக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஆவடி பஸ் நிலையத்தில் இருந்து திருவேற்காட்டிற்கு இயக்கப்பட்ட மினிபஸ்(எஸ்52) திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அந்த பஸ்சை நம்பி வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மினபஸ் சேவை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.ஆவடி சந்தை, வசந்தம் நகர், கோவர்தனகிரி, ஐயங்குளம், பருத்திப்பட்டு, சுந்தரசோழபுரம் வழியாக திருவேற்காடு வரை சென்று வந்தது. திருவேற்காடு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் இந்த மினி பஸ்சை அதிகம் பயன்படுத்தினர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.

    தற்போது ஆடி மாதம் என்பதால், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிறுத்தப்பட்ட மின்பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லக்கூடிய 40ஏ, 24 சி ஆகிய பஸ்களும் தற்போது இயங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஆவடி பஸ்நிலையத்தில் இருந்து திருவேற்காடு, கோவில் பதாகை, சேக்காடு அண்ணாநகர், காமராஜர் உள்ளிட்ட இடங்களுக்கு இயங்கி வந்த மினிபஸ் சேவைகளும் குறைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • கருணா என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் புனித இஞ்ஞாசியர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பள்ளிக்கு சொந்தமான பஸ், மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

    வழக்கம் போல் இன்று காலையும் பள்ளிக்கு சொந்தமான மினிபஸ்சித்தார், மூன்று ரோடு, சேவானூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஒரே நேரத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

    அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பள்ளி பஸ் அம்மாபேட்டை அருகே உள்ள சாரி கொட்டாய் என்ற இடம் அருகே இன்று காலை 8.30மணியளவில் வந்த போது சேவானூர் தழுக்கனூர் பகுதியை சேர்ந்த கருணா (11) என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து மினி பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

    பின்னர் மயக்கம் அடை ந்த மாணவன் கருணாவை சிகிச்சைக்காக அருகில் இருந்த பொது மக்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக பாதி மாணவ, மாணவிகள் மினிபஸ்சில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் 2 முறை மாணவ, மாணவிகளை மினி பஸ் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடனில் மூழ்கி போன விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினிபஸ்சாக விற்பனை செய்து கந்து வட்டி கும்பலுக்கு கடன் செலுத்தி வந்துள்ளார்.
    • பைனான்ஸ் நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்துள்ளனர். இதனால் கந்து வட்டி கும்பல் மேல் நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67) மினி பஸ் அதிபர்.

    இவர் படந்தாலுமூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று உள்ளார்.. இதனால் கடனில் மூழ்கி போன விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினிபஸ்சாக விற்பனை செய்து கந்து வட்டி கும்பலுக்கு கடன் செலுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டின் குளியல் அறைக்குள் சென்ற விஜயகுமார் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷ மருந்தை அருந்தியுள்ளார்.இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் வினோஷ், மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் பைனான்ஸ் நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்துள்ளனர். இதனால் கந்து வட்டி கும்பல் மேல் நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கந்து வட்டி கும்பல் மிரட்டிய பரபரப்பு ஆடியோக்களை யும், கந்து வட்டி கும்பல் டார்ச்சர் குறித்த ஐந்து பக்க புகாரையும் அவர் கொடுத்துள்ளார். கந்து வட்டி கும்பலின் கொடுமையால் மினி பஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டது மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.
    • மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28).

    இருவரும் 8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.சுஜிலா நாகர்கோவில் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார்.தற்போது ஆனந்த் மற்றும் சுஜிலா அருகில் காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜிலா வசித்து வந்த காரியாவிளை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் சுஜிலா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடல் பரிசோதனை செய்ய ப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை ஆனந்தின் சகோதரி வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு ஊருக்கு வருகிறார்.

    அதன்பின்பு சுஜிலா உடல் ஊருக்கு எடுத்து அடக்கம் செய்யப்படும் என ஆனந்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர். சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியது திங்கள்நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது.

    நேற்று முன்தினம் அவர் இறந்த பின்பும் அவரது செல் போனுக்கு அழைப்பு வந்தது.செல்போனை போலீசார் எடுத்து பேசினர்.அப்போது பேசிய மினி பஸ் டிரைவர் கோபத்தில்தான் பேசியுள்ளார்.இதனால் இவர்தான் அவரை தற்கொலை தூண்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுஜிலாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விபரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதன் முடிவில் சுஜிலா தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என போலீசார் கூறினர். போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த மினிபஸ் டிரைவர் தலைமறைவாகி விட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.அவரை பிடித்து விசாரித்தால்தான் சுஜிலா மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியும் என கூறினர்.

    தற்கொலை செய்து கொண்ட சுஜிலா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அதில் மினிபஸ் டிரைவர் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் 'ஐ மிஸ் புருஷா'என காதல் கணவன் ஆனந்தை குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகள் சாக்லெட் சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்'எனவும் ஆனந்தை அவர் கேட்டு எழுதியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

    சுஜிலா அடுத்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்.மினி பஸ் டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், மினி பஸ் டிரைவர் இரவு வேளையிலும் சுஜிலாவுக்கு போன் செய்து டார்ச்சர் கொடுப்பாராம்.சுஜிலா வெளிநாடு செல்வதை மினிபஸ் டிரைவர் விரும்பவில்லையாம்.இதனால் நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.நேற்று முன்தினமும் அவர் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்ற சுஜிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.

    சுஜிலாவுக்கு கடும் தொல்லை கொடுத்து வந்த மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

    • படுகாயமடைந்த பஸ் பயணி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வெள்ளியாக்குளம் மேற்கு கரையை சேர்ந்தவர் ஹரிகுமார் (வயது 51).கூலித்தொழிலாளி.

    19 வருடத்திற்கு முன் இவர் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் இடது கால் தொடை எலும்பில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் அவரால் சரிவர நடக்க முடியாது. சம்பவத்தன்று இவர் குளச்சல் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்ல குளச்சலிருந்து திக்கணங்கோடு சென்ற மினி பஸ்சில் ஏறினார்.

    மினி பஸ் டிரைவர் அவரை வெள்ளியாகுளம் நிறுத்தத்தில் இறக்கி விடாமல் குளவிளை நிறுத்தத்தில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் டிரைவருக்கும் ஹரிகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மினி பஸ் டிரைவர் , தொழிலாளி ஹரிகுமாரை தாக்கினாராம்.இதில் அவருக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஹரிகுமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து குளச்சல் போலீசார்  மினி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்பக்கம் வழியாக இறங்கியபோது ஓட்டுனர் திடீரென பஸ்சை இயக்கியதால் லலிதா நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது
    • ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே தலக்குளம் குலாலர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இவர் இறந்து விட்டார் இவரது மனைவி லலிதா (வயது 60) வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இவர், நேற்று திங்கள் நகரில் இருந்து காலையில் காய்கறிகள் வாங்கி விட்டு திங்கள்நகர் பஸ் நிலையத்திலிருந்து வெள்ளமோடி செல்லும் மினிபேருந்தில் ஏறி தலக்குளம் பகுதியில் வைத்து முன்பக்கம் வழியாக இறங்கியபோது ஓட்டுனர் திடீரென பஸ்சை இயக்கியதால் லலிதா நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் லலிதாவின் காலில் பின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தி னர் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியதின் பேரில் லலிதா வின் மகள் ரூபாவதி இரணியல் போலீஸ் நிலை யத்தில் கொடுத்த புகரின் பேரில் மினி பேருந்து ஓட்டுனர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த சுனில் மரியதாஸ் (34) என்பவர் மீது இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து பஸ்சை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×