search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு உதவி பெறும் பள்ளி"

    • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • கருணா என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் புனித இஞ்ஞாசியர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பள்ளிக்கு சொந்தமான பஸ், மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

    வழக்கம் போல் இன்று காலையும் பள்ளிக்கு சொந்தமான மினிபஸ்சித்தார், மூன்று ரோடு, சேவானூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஒரே நேரத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

    அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பள்ளி பஸ் அம்மாபேட்டை அருகே உள்ள சாரி கொட்டாய் என்ற இடம் அருகே இன்று காலை 8.30மணியளவில் வந்த போது சேவானூர் தழுக்கனூர் பகுதியை சேர்ந்த கருணா (11) என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து மினி பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

    பின்னர் மயக்கம் அடை ந்த மாணவன் கருணாவை சிகிச்சைக்காக அருகில் இருந்த பொது மக்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக பாதி மாணவ, மாணவிகள் மினிபஸ்சில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் 2 முறை மாணவ, மாணவிகளை மினி பஸ் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×