இரணியல் அருகே மினிபஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

முன்பக்கம் வழியாக இறங்கியபோது ஓட்டுனர் திடீரென பஸ்சை இயக்கியதால் லலிதா நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறதுஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்
இரணியல் அருகே மினிபஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
Published on

கன்னியாகுமரி :

இரணியல் அருகே தலக்குளம் குலாலர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இவர் இறந்து விட்டார் இவரது மனைவி லலிதா (வயது 60) வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவர், நேற்று திங்கள் நகரில் இருந்து காலையில் காய்கறிகள் வாங்கி விட்டு திங்கள்நகர் பஸ் நிலையத்திலிருந்து வெள்ளமோடி செல்லும் மினிபேருந்தில் ஏறி தலக்குளம் பகுதியில் வைத்து முன்பக்கம் வழியாக இறங்கியபோது ஓட்டுனர் திடீரென பஸ்சை இயக்கியதால் லலிதா நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் லலிதாவின் காலில் பின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தி னர் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியதின் பேரில் லலிதா வின் மகள் ரூபாவதி இரணியல் போலீஸ் நிலை யத்தில் கொடுத்த புகரின் பேரில் மினி பேருந்து ஓட்டுனர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த சுனில் மரியதாஸ் (34) என்பவர் மீது இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து பஸ்சை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com