search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்"

    • கம்யூனிஸ்டு தொண்டர் ஒருவர் அரிசி, பருப்பு, புளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய மாலை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
    • தனியார் பள்ளிகளில் மன அழுத்தம் காரணமாக மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    சென்னை:

    அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதானி, அம்பானிக்கு வரிச்சலுகை. அத்தியாவசிய பொருட்களுக்கு வரியா? என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள்.

    கம்யூனிஸ்டு தொண்டர் ஒருவர் அரிசி, பருப்பு, புளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய மாலை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழை மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

    தனியார் பள்ளிகளில் மன அழுத்தம் காரணமாக மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே தனியார் பள்ளிகளை தமிழக அரசு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    • கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் ஒரு பைக்கில் வந்து இந்த அலுவலகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

    கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1987, 1991 மற்றும் 1996 இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியில் இருந்து சிபிஐ (எம்) வேட்பாளராக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 1987-1991ல் ஈ.கே.நாயனார் தலைமையிலான சி.பி.ஐ.(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் அரசில் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

    மூத்த சிபிஐ(எம்) தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் (90) வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் அவர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடல் தகனம் நாளையில் மஞ்சேரியில் நடைபெறுகிறது.

    மன்னார்க்காட்டில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய மேனன், ஆசிரியர் சங்கங்களை அமைத்து அரசியலில் நுழைந்தார்.

    இந்தத் துறையில் முக்கியப் பதவிகளை வகித்த பிறகு, மேனன் சிபிஐ(எம்) கட்சியின் முக்கியத் தலைவராக பொறுப்பேற்றார்.

    அவர் 1987, 1991 மற்றும் 1996 இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியில் இருந்து சிபிஐ (எம்) வேட்பாளராக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1987-1991ல் ஈ.கே.நாயனார் தலைமையிலான சி.பி.ஐ.(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் அரசில் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

    பின்னர், மேனன் 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் நாயனார் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலர் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.

    ×