search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்
    X

    அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்

    • கம்யூனிஸ்டு தொண்டர் ஒருவர் அரிசி, பருப்பு, புளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய மாலை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
    • தனியார் பள்ளிகளில் மன அழுத்தம் காரணமாக மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    சென்னை:

    அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதானி, அம்பானிக்கு வரிச்சலுகை. அத்தியாவசிய பொருட்களுக்கு வரியா? என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள்.

    கம்யூனிஸ்டு தொண்டர் ஒருவர் அரிசி, பருப்பு, புளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய மாலை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழை மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

    தனியார் பள்ளிகளில் மன அழுத்தம் காரணமாக மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே தனியார் பள்ளிகளை தமிழக அரசு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×