search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாத்திரைகள்"

    • பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா்.
    • வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அவிநாசி அரசு கலைக்கல்லூரி அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளிட்டவற்றில் நடைபெற்றது.

    பொது சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இயக்குநரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் குடற்புழு நீக்கும் மாத்திரைகள்(அல்பெண்டசோல்) பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா். இரு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட நலக் கல்வியாளா் ஜெயபிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், அரசு கல்லூரி முதல்வா் நளதம், அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் புனிதவதி(மகளிா்), ஆனந்தன்(ஆண்கள்), மருத்துவா்கள் ஜெயப்பிரியா, யசோதா, சண்முகப்பிரியா, கீதா, யாகசுந்தரம், வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் செப்டம்பா் 16ந்தேதி வரை அவிநாசி வட்டாரத்தில் தொடக்கப்பள்ளி முதல் பிளஸ்2 வரை உள்ள 131 பள்ளிகளை சோ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாத்திரைகள் மாணவா்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

    • தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    • அந்த மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி-மயக்கம் உண்டானது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்தி நகரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்து 480 மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    அந்த மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி-மயக்கம் உண்டானது. இதைத்தொடர்ந்து உடன டியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் மாணவிகள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். வாந்தி-மயக்கம் ஏற்பட்ட மொத்தம் 115 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கும் மாணவிகள் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தோம். இதனால் சில மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம்.

    அதை பார்த்த சில மாணவிகளுக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உள்ளது. மாணவிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. சில மாணவிகள் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். மற்ற மாணவிகளும் குணம் அடைந்து விரைவில் வீடு திரும்பி விடுவார்கள் என்று கூறினார்கள்.

    இதை தொடர்ந்து இன்று காலை வரை 78 பேர் இயல்பு நிலைக்குத் திரும்பி மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினார்கள் தற்

    பொழுது 5 மாணவி கள் மட்டும் மருத்துவ மனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.
    • சக்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையில் மருத்துவ குழுவினர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு இரத்த பரிசோதனை, சக்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம், துணைத்தலைவர் மங்களநாயகி, நகர்மன்ற உறுப்பினர்கள் உமா நடராஜன், மயில்வாகனம், அனிஸ் பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • குளச்சல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் நிலையை உடனே சீர் செய்ய வேண்டும்.
    • குளச்சல் பகுதியில் சுனாமி குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் நகர அ.தி.மு.க.செயலாளர் ஆண்ட்ரோஸ் மற்றும் தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா ஆகியோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குளச்சல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு காய்ச்சல், பிரஷர் போன்ற நோய்களுக்கு மாத்திரைகள், ஊசிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் தினம் தினம் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையை உடனே சீர் செய்ய மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.மேலும் குளச்சல் பகுதியில் சுனாமி பேரலையால் பாதிக்க ப்பட்ட குடும்பங்க ளுக்கு அன்றைய அ.தி.மு.க. வின் ஆட்சியில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அந்த குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட வேண்டும்.

    மேலும் குறிப்பிட்ட. பிரச்சி னைகளுக்கு உட னடியாக தீர்வு காண வில்லை என்றால் மக்களை திரட்டி குளச்சல் நகர அ.இ.அ.தி.மு.க.வினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×