search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் மோதல்"

    • பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
    • தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    பொன்னேரி:

    சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    அவர்கள் தினந்தோறும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வது வழக்கம். ரெயிலில் ரூட்டு தல பிரச்சினையால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து கல்லூரி மாணவர்களிடையே மோதலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் இருந்து சூலூர்பேட்டை நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டு இருந்தது. இதில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவர்களது மோதல் நீடித்தது.

    இதையடுத்து பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மின்சார ரெயிலை நிறுத்தினர்.

    உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ரெயிலில் இருந்து கிழே குதித்தனர். அப்போதும் அவர்கள் கற்களை வீசி மோதிக்கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஓடும் மின்சார ரெயிலில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் காரணமாக மின்சார ரெயில் சிறிது நேரம் தாமதமாக சென்றது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் மற்றும் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தாக்குதலில் காயம் அடைந்த மாணவனின் தாய் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் மனு அளித்து உள்ளார்.

    ரெயிலில் கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க ரெயில்வே போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பள்ளி முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாக அருகில் உள்ள பஸ்நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
    • திருத்தணி போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசினர் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாக அருகில் உள்ள பஸ்நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    அப்போது வாலிபர் சிலரும் மற்றொரு மாணவர்களுக்கு ஆதரவாக கையில் கம்புடன் வந்து தாக்கினர். இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதியிலேயே மாணவர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சியை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இது தொடர்பாக திருத்தணி போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோ காட்சியை வைத்து மோதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் மோதலுக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இன்று பள்ளியில் இடைவேளையின்போது மாணவர்கள் சாப்பிட்டு விட்டு கை கழுவி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது மோதலாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த மாணவர் ஒருவர் சக மாணவரை கத்தியால் குத்தினார். இதனால் அந்த மாணவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று காயம்பட்ட மாணவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விருத்தாசலம் அருகே சின்ன வடவாடியிலிருந்து இன்று காலை டவுன் பஸ் பொதுமக்களை ஏற்றி கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த கூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது வயலூர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்து வந்த போது பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்ைச அனுப்பி வைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த 5க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அறிந்த பா.ம. க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள்சாலையில் அமர்ந்து மறியல்செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசம்செய்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
    • மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் ரிஷிவந்தியம் அருகே மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர் - சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாண வர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த 16-ந் தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
    • ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஜல்லி கற்கள் மற்றும் கத்திகளால் தாக்கிக் கொண்டனர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் தக்கோலம் ராஜம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (20) என்பவரை கத்தியால் தலையில் வெட்டினர். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனை சென்று விசாரித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதில் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காயம் அடைந்த கல்லூரி மாணவன் தினேஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில் கடம்பத்தூரைச் சேர்ந்த ராகுல் (18), ரோகித் (18) மற்றும் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    ஆனால் இவர்கள் 3 பேரும் மாநிலக் கல்லூரி மாணவர்களுடன் ரெயிலில் பயணிக்கும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மாணவனை கத்தியால் வெட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த பூண்டி அடுத்த நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த மெர்லின் (19), சுமன் என்ற சூர்யா (19) ஆகிய 2 மாணவனை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக்கொண்டனர்.
    • பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவர் தினேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    திருவள்ளூர்:

    சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரிகளில் திருத்தணி, அரக்கோணம், கடம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் புறநகர் ரெயிலில் பயணம் செய்து சென்னை சென்று வருவது வழக்கம்.

    இதில் இருதரப்பு மாணவர்களிடையே சென்னையிலும், பஸ், ரெயில்களிலும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. ரூட்டு தல பிரச்சினையில் அவர்கள் கத்தி, அதிவாளுடன் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வந்தது.

    ஏற்கனவே ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று அறிவுரைகள் வழங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. எக்கனாமிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வரும் படித்து வரும் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பர் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மின்சார ரெயிலில் வந்தார். அவர் ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அங்கிருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக்கொண்டனர். இந்த தாக்குதலில் மாணவர் தினேசின் தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் பல மாணவர்களும் காயம் அடைந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தது வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவர் தினேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 12 தையல் போடப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் துணை போலீஸ் சூப்பரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
    • ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த ஒரு மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை சமாதானபுரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மோதலையடுத்து போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இதேபோல் சில வருடங்களுக்கு முன் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அப்போதைய பாளை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து திருக்குறளை எழுதுமாறு நூதன தண்டனை வழங்கினார்.

    இந்நிலையில் நேற்று பிளஸ்-2 மாணவர்கள் அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு வந்துள்ளனர். அதே பஸ்சில், தனியார் டுடோரியல் சென்டரில் படிக்கும் மாணவர்களும் வந்துள்ளனர். அவர்கள் இரு தரப்பினருக்கும் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது பஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த ஒரு மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த அந்த மாணவனின் பெற்றோர் பாளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்களை கைது செய்தனர்.

    • சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதால் மாணவ-மாணவிகள் தடம் மாறிச் செல்கின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் சிலர் கோஷ்டியாக செயல்பட்டு உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடந்து வந்தன. நேற்றும் 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

    காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்ததும் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    மோதல் சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரகுமார், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்துப் பேசினர்.

    இதற்கிடையில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மேகலிங்கம் மற்றும் மேலாண்மைக் குழுவினரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 12 மாணவர்களை ஒரு மாத காலத்திற்கு சஸ்பெண்டு செய்தும், ஒரு மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களது பெற்றோருக்கும் அறிவுரை விடுக்கப்பட்டது.

    மாணவர்கள் மோதல் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் தடம் மாறிச் செல்கின்றனர்.

    அரசு பள்ளியின் அருகே உள்ள கோவில் மைதானம் மற்றும் தெருக்களில் பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமல்ல வெளியில் உள்ள இளைஞர்களும் பைக் ரோமியோக்களாக மாறி நாளுக்கு நாள் அட்டகாசம் செய்கின்றனர்.

    எனவே இந்தப் பகுதியில் காலை, மாலை வேளைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.

    ×