search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students conflict"

    • இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ராமிரெட்டிபட்டி கிராமத்தில் அரசு மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு தலைமைஆசிரிய ராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் 30 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் சிலர் ஆசிரியருக்கு ஆதரவாக இதை தட்டிக்கேட்ட னர். இதனால் அவர்க ளுக்கிடையே மோதல் உண்டானது.

    இதில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தாக்கப்பட்ட மாணவர்க ளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாண வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    இதனால் பள்ளியின் தலைமைஆசிரியர் உமாராணி 2 தரப்பு மாண வர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மாணவர்களிடம் எழுதி வாங்கியும், பெற்றோரிடம் மாணவர்களை கண்டிக்க வும் அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விருத்தாசலம் அருகே சின்ன வடவாடியிலிருந்து இன்று காலை டவுன் பஸ் பொதுமக்களை ஏற்றி கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த கூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது வயலூர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்து வந்த போது பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்ைச அனுப்பி வைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த 5க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அறிந்த பா.ம. க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள்சாலையில் அமர்ந்து மறியல்செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசம்செய்தனர்.

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் அரசு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சோமசுந்தரம் என்பவர் முதல்வராக உள்ளார். கல்லூரியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாக புகார் எழுந்திருந்த நிலையில் நேற்று முதலாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கம்பு, கட்டை போன்ற ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.

    இதில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் சூர்யபிரகாஷ் (வயது 20) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது மோதலில் ஈடுபட்ட திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (18), கண்டு குளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் முத்துக்குமார், கூத்தியார்குண்டைச் சேர்ந்த முத்தையா மகன் அஜித்குமார், செல்வராஜ் மகன் ராஜ்குமார், தோப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கல்லூரியில் மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ×