search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் ரெயில் நிலைய மோதலில் சென்னை மாணவர்கள் 2 பேர் கைது
    X

    திருவள்ளூர் ரெயில் நிலைய மோதலில் சென்னை மாணவர்கள் 2 பேர் கைது

    • கடந்த 16-ந் தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
    • ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஜல்லி கற்கள் மற்றும் கத்திகளால் தாக்கிக் கொண்டனர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் தக்கோலம் ராஜம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (20) என்பவரை கத்தியால் தலையில் வெட்டினர். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனை சென்று விசாரித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதில் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காயம் அடைந்த கல்லூரி மாணவன் தினேஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில் கடம்பத்தூரைச் சேர்ந்த ராகுல் (18), ரோகித் (18) மற்றும் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    ஆனால் இவர்கள் 3 பேரும் மாநிலக் கல்லூரி மாணவர்களுடன் ரெயிலில் பயணிக்கும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மாணவனை கத்தியால் வெட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த பூண்டி அடுத்த நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த மெர்லின் (19), சுமன் என்ற சூர்யா (19) ஆகிய 2 மாணவனை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×