search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமுகாம்"

    • கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • முகாமில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்,

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணிபாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 225 நபர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மீனாட்சி மருத்து வமனை மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

    மேல்சிகிச்சை தேவைபடு பவர்களை கண்டறிந்து பரிந்துரை செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    இம்முகாமில் பொது மேலாளர்கள் இளங்கோவன், முகமதுநாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்த ராஜன், துணை மேலாளர்கள் சிங்காரவேலு, ராஜேஷ், பணி மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் ராஜசேகர், மருத்துவர்கள் குருநாதன், சினேகா, செல்வராஜ் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சிமருங்கூரணி கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பொது மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், இசிஜி, ஸ்கேன் பரிசோதனை, அனைத்து வகையான ரத்த சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சிமருங்கூரணி கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமினை கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தொடங்கி வைத்தார்.முகாமில் பொது மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், இசிஜி, ஸ்கேன் பரிசோதனை, அனைத்து வகையான ரத்த சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில் 847 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.20 நபர்களுக்குகண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.டிஜிட்டல் எக்ஸ் ரே 46 பேருக்கு எடுக்கப்பட்டது.மருத்துவ பெட்டி 10 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.முன்னதாக அனைவரையும் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

    முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன், ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி பிரியா அய்யாத்துரை, ஊராட்சி மன்ற பிரதிநிதிகள்சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமிஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவு சார்பாக கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் மருத்துவ முகாம்நடைபெற்றது
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவு சார்பாக கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் மருத்துவ முகாம்நடைபெற்றது.

    மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் ஸ்ரீகலா தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் மதன்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மருத்துவப் பிரிவு மாநிலச்செயலாளர் டாக்டர் அரவிந்த் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வும், இலவசமாக 205 கோடி ஊசிகளை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • செவந்தாலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை களில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கண் பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக 2 நபரும், இதய சிகிச்சைக்காக இரண்டு நபரும் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்தனர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த செவந்தாலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை களில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் செவந்த லிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சதீஷ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை துவக்கி வைத்தனர்.

    முகாமில் அரசு மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவ குழுவினர்கள் வருகை தந்து இலவச பரிசோதனையையும் தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சையும் அளித்தனர். இசிஜி, ஸ்கேன், சிறுநீர், ரத்த பரிசோதனைகள் மற்றும் 30 கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

    கண் பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக 2 நபரும், இதய சிகிச்சைக்காக இரண்டு நபரும் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்தனர். மொத்தம் 1043 பயனாளிகள் பயனடைந்தனர்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நரேந்தர், வட்டார சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் கார்த்திக், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


    • மருத்துவர் அந்தோணி சாமி ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்து கூறி, மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்து பொருட்கள் மற்றும் மருந்துகள்வழங்கப்பட்டது

    திருச்சி :

    திருச்சி மாவட்டம்உய்யகொண்டான் திருமலை மாரிஸ்ட் அருட் சகோதரர்கள் நடத்தும் மார்சலீன் அறக்கட்டளை வானவில் தொண்டு நிறுவனம்சார்பில் ஜூலை மாத மாதந்திர கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு இந்திய மாரிஸ்ட் தலைவர் அருட் சகோதரர் லாசர், அருட் சகோதரர்கள் சுரேஷ், ஜெயராஜ், ஆரோக்கியசாமி, சேசு மற்றும் ஹோமியோபதி மருத்துவர் அந்தோணி சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினர் ஹோமியோபதி மருத்துவர் அந்தோணி சாமி ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்து கூறி, மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    விழா ஏற்பாடுகளை வானவில் மார்சலீன் கிளப் உறுப்பினர்கள் செரின், சரண்யா ஆகியோர்செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள்கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்து பொருட்கள் மற்றும் மருந்துகள்வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விழா நிறைவு பெற்றது.

    • ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் வெப்பம், இசிஜி, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான பொது மருத்துவம் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வாராப்பூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார். முகாமில் சிவகங்கை மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் ராம்.கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். முகாமில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஐ.மலர்விழி நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    முகாமில் வாராப்பூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பொதும்மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் வெப்பம், இசிஜி, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான பொது மருத்துவம் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இதில் சிங்கம்புணரி பூசலியம்மாள் மருத்துவமனை மருத்துவகுழுவினர்கள், காரைக்குடி ஜே.எஸ்.எஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினர்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். சுகாதாரத் துறை சார்பில் முகாமில் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

    மேலும் இதில் தமிழக அரசின் மருந்து பெட்டகத்தினை 5 நபர்களுக்கு முகாமின் சிறப்பு விருந்தினர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் வழங்கினார். மேலும் இம்முகாமில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சிங்கம்புனரி வட்டாட்சியர் கயல்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, சந்திரா, வாராப்பூர் ஊராட்சியின் துணை தலைவர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.
    • 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.

    பெரம்பலூர் வட்டத்தில் வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 19-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21.07.2022 காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணிவரையிலும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-தேதி காலை 9.00மணி முதல் 2.00 மணி வரையிலும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 28-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×