search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதி வாராப்பூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்
    X

    பொன்னமராவதி வாராப்பூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்

    • ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் வெப்பம், இசிஜி, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான பொது மருத்துவம் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வாராப்பூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார். முகாமில் சிவகங்கை மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் ராம்.கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். முகாமில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஐ.மலர்விழி நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    முகாமில் வாராப்பூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பொதும்மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் வெப்பம், இசிஜி, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான பொது மருத்துவம் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இதில் சிங்கம்புணரி பூசலியம்மாள் மருத்துவமனை மருத்துவகுழுவினர்கள், காரைக்குடி ஜே.எஸ்.எஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினர்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். சுகாதாரத் துறை சார்பில் முகாமில் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

    மேலும் இதில் தமிழக அரசின் மருந்து பெட்டகத்தினை 5 நபர்களுக்கு முகாமின் சிறப்பு விருந்தினர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் வழங்கினார். மேலும் இம்முகாமில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சிங்கம்புனரி வட்டாட்சியர் கயல்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, சந்திரா, வாராப்பூர் ஊராட்சியின் துணை தலைவர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.

    Next Story
    ×