search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் சாய்ந்தன"

    • திருப்பதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
    • மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் காற்று வீசியதால் திருப்பதி மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு சென்று உடனடியாக மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர். இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பாபவிநாசம், கபில தீர்த்தம், ஜபாலி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

    திருப்பதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர் மழை காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீரென நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு உள்ளது. கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் சாலைகள் முழுவதும் தண்ணீர் ஓடுவதால் நேற்று தரிசனத்திற்கு வந்த திருப்பதியை சேர்ந்த விஜயகுமார் என்ற பக்தர் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் விஜயகுமாரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.

    • மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • கோடைகாலத்தில் பெய்த இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    நாமக்கல்:

    கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதில் வீரகனூர், நங்கவள்ளி, கரியகோவில், ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    186.6 மி.மீ மழை

    மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடைகாலத்தில் பெய்த இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கெங்கவல்லி -30, கரிய கோவில் -26, ஏற்காடு -25, ஓமலூர் -11, பெத்தநாயக்கன்பாளையம் -10.5, சேலம் -8, தம்மம்பட்டி -7, காடையாம்பட்டி -5, சங்ககிரி 3.1, ஆத்தூர் -2, ஆனை மடுவு -2, எடப்பாடி -1 என மாவட்டம் முழுவதும் 186.6 மி.மீ மழை பதிவானது. இன்று காலை மாவட்ட முழுவதும் வெயில் அடித்தபடி இருந்தது.

    நாமக்கல்

    நாமக்கல்லில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம் சாலை சந்திப்பு, குட்டை தெரு உள்பட பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் குட்டை தெருவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அவற்றை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மரங்கள் சாய்ந்தன

    வெண்ணந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, அத்தனூர், நாச்சிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மாலையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×