search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வழக்கு பதிவு"

    • ரோந்து பணியில் விசாரணை
    • மருத்துவமனையில் சிகிச்சை

    ஆம்பூர், மே.26-

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று பழுதாகி நின்றுக்கொண்டிருந்தது.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு விசாரணை செய்ய நடந்து சென்றனர். அப்போது பின்னால் வந்த கனரக லாரி போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதியதுடன் நடந்து சென்ற போலீசார் மீதும் மோதியது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிந்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வழக்கிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    நெல்லை

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்நிலையில் கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 60) என்பவர் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவில் 3 பேர் கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் தேவராஜை பிடித்து அவரது வாயில் மதுவை ஊற்றியது. பின்னர் அவரை மிரட்டிவிட்டு கடையின் ஷட்டர் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்றது. அங்கிருந்த விலை உயர்ந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து காவலாளி தேவராஜ் பணகுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கடந்த மாதம் 15-ந்தேதி இதே கடையில் காவலாளியை மிரட்டி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் நான்கு சக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் ஏற்றி சென்றனர். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை துப்பு துலங்கவில்லை.

    இந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கன்குளத்தில் கடந்த வாரம் இதேபோல் டாஸ்மாக் கடையை உடைத்து சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்மநபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

    இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வழக்கிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    • கண்ணன் என்பவர் அவரிடம் தகராறு
    • கண்ணன் வெங்கடாசலத்தை கட்டையால் தாக்கினார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா என்.குமாரபாளையம் அருகில் உள்ள அண்ணா மலைபட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 48). இவர் அங்குள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை யில் ரேஷன் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு போவதற்காக வெளியே வந்தார்.

    அப்போது நாடார் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த கண்ணன் வெங்க டாசலத்தை கட்டையால் தாக்கினார். இதில் வெங்கடா சலத்திற்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து வெங்கடாசலம் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • அதிகாலை தொழிலாளி அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
    • எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், தாழங்குப்பம் உலக நாதபுரம் 6-வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழை நீர்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மாலை தரையில் இருந்து 10அடி வரை பள்ளம் தோண்டி ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர்க் கால்வாயை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்கனவே பக்கவாட்டில் உள்ள 10 அடி உயரம் 20 அடி அகலமுள்ள பழைய மழைநீர் கால்வாய் சுவர் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

    இதில் உள்ளே இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ், அம்ரேஷ் குமார் (வயது20) ஆகியோர் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டனர்.

    பலத்த காயம் அடைந்த அவர்களை ஸ்டான்லி அரசுஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை தொழிலாளி அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். மற்றொரு தொழிலாளி பிகாசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதி திடீர் சாவு
    • இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மத்திய சிறைச்சாலையில் கள்ளக்குறிச்சி வேங்கைவாடி சேர்ந்தவர் குருசாமி (வயது 43).இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் மனைவி கொலை செய்த வழக்கில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை குருசாமிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக குருசாமியை உடனடியாக சிறை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அப்போது குருசாமிக்கு முதலுதவி செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது குருசாமியை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்த கராறு
    • மனைவியின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). டெய்லர் கடை வைத்து நடத்தி வரும் இவருக்கு விஜயா (28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்த கராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த விஜயா ஜலகண்டாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுரேஷ் நேற்று மனைவியின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்தார்.

    தாரமங்கலம்:

    மேட்டூர் அருகிலுள்ள தங்காமபுரி பட்டணம் பகுதியை சேர்ந்த வக்கீல் சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி (வயது 48). இவர் கருமலைக்கூடலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது தங்கை மகன் பிரசன்னாவுடன் மொபட்டில் சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர்.

    தாரமங்கலத்தில் இருந்து கே ஆர் தோப்பூர் படையப்பா நகர் அருகே சென்றுகொண்டு இருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்த கஸ்தூரிக்கு தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கம் உள்ள வர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மடுவுகாவிரி ஆற்றில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நிர்வாண நிலையில் கிடந்தது.
    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோட்டை மடுவுகாவிரி ஆற்றில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நிர்வாண நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.இது குறித்து சிங்கிரிபட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜ் கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    கொளத்தூர் போலீசார் பிணத்தை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×