search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வழக்கு பதிவு"

    • காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி
    • கைதானவர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த காரப்பட்டு அபிகிரி பட்டறை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). கதவாளம் பகுதியில் பாஸ்புட், டிபன் கடை நடத்தி வருகிறார்.

    கதவாளம் பகுதியை சேர்ந்த ராஜு (21), அஜித் குமார் (27) என்பவர்கள் சுபாஷ் கடைக்கு சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு வந்தனர்.

    அப்போது சுபாஷிடம் ரைசை ஆர்டர் செய்தனர். ரைஸ் வருவதற்கு சிறிது நேரம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜூ மற்றும் அஜித் ஆகியோர் சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவரை சரமாரியாக தாக்கி கடாயில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை தூக்கி சுபாஷ் மீது ஊற்றினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து சுபாஷ் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜி மற்றும் அஜித்தை கைது செய்தனர். மேலும் கைதான வாலிபர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • பட்டா கத்தியால் வெட்டினார்
    • வாலிபர் கைது-பரபரப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தின் அருகே மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடையில் உள்ளன.

    முருகேஷ் என்பவர் பேன்சி ஸ்டோரும், பிரசாந்த் என்பவர் பூ வியாபாரமும் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மார்க்கெட்டில் திடீரென பட்டா கத்தியுடன் வாலிபர் ஒருவர் புகுந்தார்.

    கடைகளை மூடக்கோரி மிரட்டி முருகேசையும், பிரசாந்திடமும் தகராறில் ஈடுபட்டார். மேலும் பட்டா கத்தியால் அவர்களை வெட்டினார். இதில் இருவரும் காயமடைந்தனர்.

    இதனை தடுக்க வந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் வாலிபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெட்டு காயமடைந்த இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். ரகளையில் ஈடுபட்ட அம்பேத்கார் நகரை சேர்ந்த பரணி (வயது 25)என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட்டில் வாலிபர் புகுந்து வியாபாரிகளை பட்டா கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாலிபர் கைது
    • முள் மரங்களை வெட்டியதை தட்டிக் கேட்டார்

    செய்யாறு:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டையை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 50). இவர் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியில் வன காப்பாளராக உள்ளார்.

    கடந்த 24-ந் தேதி மாலை சுமங்கலி கிராமம் பகுதியில் இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசுக்கு சொந்தமான இடத்தில் கந்தன் ( 24 ) என்பவர் முள் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட சின்னப்பன் ஏன் மரங்களை வெட்டுகிறாய் என்று கேட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த கந்தன், சின்னப்பனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தனை நேற்று கைது செய்தனர்.

    • வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் சாய்பாபா தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 35). தொடப்பம் வியாபாரி. இவருக்கு மனைவி 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தாயார் விஜயா பல்வேறு இடங்களில் தேடியும் இவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வியாபாரியை தேடி வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது
    • போலீசார் வலை வீச்சு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இதன் அருகே மற்றொரு கல்குவாரி உள்ளது.

    இந்த நிலையில் வெங்கடேசனுக்கும் அருகே கல்குவாரி நடத்தி வரும் 27 வயதுடைய வாலிபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மின்னூர் பகுதியை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அருகே இருந்தவர்கள் படுகாயம் அடைந்த வரை மீட்டு வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெங்கடேசன் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசில் புகார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் தாய் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் காட்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மாணவியின் தாய் மாணவியை பள்ளியில் விட்டு சென்றார்.

    பின்னர் மாணவி வீடு திரும்பவில்லை இது குறித்து மாணவியின் தாய் காட்பாடி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த பால்வார்த்து வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37), தொழிலாளி.

    இவர் தனது பைக்கில் சந்தவாசலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றார்.

    அப்போது கல்வாசல் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சந்தவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயக்க பொடி தூவி துணிகரம்
    • போலீசார் தீவிர விசாரணை

    செங்கம்:

    செங்கம் அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சென்னம்மாள் (வயது 70). இவர்கள் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    வீட்டின் அருகே சென்னம்மாள் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை காரில் 2 ஆண்களுடன் வந்த மர்மபெண் நீண்ட நேரமாக சென்னம்மாளை நோட்டமிட்டார்.

    திடீரென அந்த பெண் சென்னம்மாளிடம் சென்று உங்களுடைய கணவரிடம் நான் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன், அதனை திருப்பி தருவதற்காக வந்துள்ளேன் என்று கூறினார்.

    இதனால் செல்லம்மாள் அவர்களை வீட்டின் முன் அழைத்து சென்றார்.

    பின்னர் அவர்கள் கொடுத்த ரூ.2 ஆயிரத்தை கையில் வாங்கினார். அந்த நேரத்தில் மூதாட்டி மீது மயக்கபொடி தூவினர். சிறிது நேரத்தில் சென்னாம்மள் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு மயக்க நிலையில் இருந்து மீண்டு எழுந்து பார்த்தார்.

    அப்போது அந்த மர்ம பெண்ணும் அவர்களுடன் இருந்த 2 பேரும் மாயமாகி உள்ளனர். மேலும் கட்டில் அடியில் வைத்திருந்த 7 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னம்மாளின் கணவர் பாலகிருஷ்ணன் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியிலும் இதே போல அந்த மர்ம பெண் தனியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியிடம் உறவினர் என்று கூறி 8 பவுன் நகை கொள்ளையடித்த சென்றுள்ளனர்.

    இதே போல கலசப்பாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் துக்கம் விசாரிப்பது போல் காரில் வந்து கதறி அழுது பெண் 13 பவுன் நகையை நேற்று திருடி சென்று விட்டனர்.

    இந்தப் பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடித்து விட்டு தகராறு
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் அஸ்ரத் (22), இவரது தம்பி ரியாஸ் (21). 2 பேரும் கதவுகளுக்கு பாலீஸ் போடும் தொழில் செய்து வந்தனர். அஸ்ரத் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் அஸ்ரத், அவரது தாய் மற்றும் தம்பிரியாசை கட்டையால் தாக்கினார்.

    இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் அண்ணன் அஸ்ரத்தை கட்டையால் சரமாரியாக தாக்கி, வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டார். பின்னர் இன்று காலை அவரது தாய், அறையின் கதவை திறந்து பார்த்தபோது, அஸ்ரத் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரியாசை கைது செய்தனர்.

    • முன்பக்க கண்ணாடி உடைந்தது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவை அடுத்த மருதாலம் கூட்ரோடு பகுதியில் கடந்த 28-ந் தேதி நெய்வேலியில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.கவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி செல்வதற்காக வந்த அரசு பஸ் மீது கற்கள் வீசப்பட்டது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் பஸ்மீது கல் வீசி தாக்கியதாக ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரியை சேர்ந்த மணிவண்ணன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    • பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • தனிப்படை போலீசார் பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் கொள்ளையன் ஷாஜகானை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் ரேணி குண்டா ரெயில் நிலையத்தில் ஏறி சென்னை வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ் பொதுப் பெட்டியில் ஏறியுள்ளார். மனைவி, பிள்ளைகள் ஊனமுற்றோர் பெட்டியில் ஏறியுள்ளனர்.

    ரெயில் வியாசர்பாடியை கடந்து மெதுவாக வரும் போது ஒரு வாலிபர் ஊன முற்றோர் பெட்டியில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி சரண்யா (33) விடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரெயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் கொள்ளையன் ஷாஜகானை (25) கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது வழிப்பறி செய்த நகைகள் குறித்து கேட்டனர்.

    திருடிய நகைகளை பாஸ்கரன் (29), லாரன்ஸ் (24), தங்கபாண்டி (27) ஆகியோரிடம் காட்டி விற்க முயன்றபோது நகைகளை தன்னிடம் இருந்து திருடி சென்றதாக ஷாஜகான் தெரிவித்தார்.

    தனக்கு மது வாங்கி கொடுத்து போதையில் இருந்தபோது நகைகளை திருடி சென்றதாக அவர் கூறியதை தொடர்ந்து 3 பேரையும் பிடிக்க போலீசார் 'பொறி' வைத்தனர்.

    அவர்களிடம் இருந்து 2 செயின் மற்றும் மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்று விட்டனர்.
    • பக்கத்து கடையில் இருந்த 10 அரிசி மூட்டைகளை தூக்கி சென்று விட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடி கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் தினந்தோறும் லட்சக்கணக்கில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு டாஸ்மாக் அருேக உள்ள கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்து டாஸ்மாக் கடை சுவற்றில் துளை போட முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை முன்பு போடப்பட்டிருந்த இரும்பு கேட்டை உடைத்து எடுத்துவிட்டு பின்பு இரும்பு ஷட்டரையும் உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்று விட்டனர்.

    மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாளில் விற்பனை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தன.

    அதனையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பக்கத்து கடையில் இருந்த 10 அரிசி மூட்டைகளை தூக்கி சென்று விட்டனர்.

    அந்த பகுதியில் மேலும் 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

    இன்று காலையில் கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×