என் மலர்
நீங்கள் தேடியது "Police registered a case"
- தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்தார்.
தாரமங்கலம்:
மேட்டூர் அருகிலுள்ள தங்காமபுரி பட்டணம் பகுதியை சேர்ந்த வக்கீல் சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி (வயது 48). இவர் கருமலைக்கூடலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது தங்கை மகன் பிரசன்னாவுடன் மொபட்டில் சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர்.
தாரமங்கலத்தில் இருந்து கே ஆர் தோப்பூர் படையப்பா நகர் அருகே சென்றுகொண்டு இருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்த கஸ்தூரிக்கு தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கம் உள்ள வர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்த கராறு
- மனைவியின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). டெய்லர் கடை வைத்து நடத்தி வரும் இவருக்கு விஜயா (28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்த கராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த விஜயா ஜலகண்டாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுரேஷ் நேற்று மனைவியின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கண்ணன் என்பவர் அவரிடம் தகராறு
- கண்ணன் வெங்கடாசலத்தை கட்டையால் தாக்கினார்.
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா என்.குமாரபாளையம் அருகில் உள்ள அண்ணா மலைபட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 48). இவர் அங்குள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை யில் ரேஷன் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு போவதற்காக வெளியே வந்தார்.
அப்போது நாடார் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த கண்ணன் வெங்க டாசலத்தை கட்டையால் தாக்கினார். இதில் வெங்கடா சலத்திற்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து வெங்கடாசலம் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
- ரோந்து பணியில் விசாரணை
- மருத்துவமனையில் சிகிச்சை
ஆம்பூர், மே.26-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று பழுதாகி நின்றுக்கொண்டிருந்தது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு விசாரணை செய்ய நடந்து சென்றனர். அப்போது பின்னால் வந்த கனரக லாரி போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதியதுடன் நடந்து சென்ற போலீசார் மீதும் மோதியது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிந்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள செங்கலி குப்பம் ஊராட்சியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41) .
இவரது மனைவி அறிவுக்கொடி (37). 2 பேரும் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலா ளியாக வேலை செய்து வருகின்றனர்.
கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்துபார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்பக்க கண்ணாடி உடைந்தது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜாவை அடுத்த மருதாலம் கூட்ரோடு பகுதியில் கடந்த 28-ந் தேதி நெய்வேலியில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.கவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி செல்வதற்காக வந்த அரசு பஸ் மீது கற்கள் வீசப்பட்டது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் பஸ்மீது கல் வீசி தாக்கியதாக ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரியை சேர்ந்த மணிவண்ணன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
- மது குடித்து விட்டு தகராறு
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் அஸ்ரத் (22), இவரது தம்பி ரியாஸ் (21). 2 பேரும் கதவுகளுக்கு பாலீஸ் போடும் தொழில் செய்து வந்தனர். அஸ்ரத் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.
மேலும் அஸ்ரத், அவரது தாய் மற்றும் தம்பிரியாசை கட்டையால் தாக்கினார்.
இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் அண்ணன் அஸ்ரத்தை கட்டையால் சரமாரியாக தாக்கி, வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டார். பின்னர் இன்று காலை அவரது தாய், அறையின் கதவை திறந்து பார்த்தபோது, அஸ்ரத் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரியாசை கைது செய்தனர்.
- மயக்க பொடி தூவி துணிகரம்
- போலீசார் தீவிர விசாரணை
செங்கம்:
செங்கம் அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சென்னம்மாள் (வயது 70). இவர்கள் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
வீட்டின் அருகே சென்னம்மாள் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை காரில் 2 ஆண்களுடன் வந்த மர்மபெண் நீண்ட நேரமாக சென்னம்மாளை நோட்டமிட்டார்.
திடீரென அந்த பெண் சென்னம்மாளிடம் சென்று உங்களுடைய கணவரிடம் நான் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன், அதனை திருப்பி தருவதற்காக வந்துள்ளேன் என்று கூறினார்.
இதனால் செல்லம்மாள் அவர்களை வீட்டின் முன் அழைத்து சென்றார்.
பின்னர் அவர்கள் கொடுத்த ரூ.2 ஆயிரத்தை கையில் வாங்கினார். அந்த நேரத்தில் மூதாட்டி மீது மயக்கபொடி தூவினர். சிறிது நேரத்தில் சென்னாம்மள் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு மயக்க நிலையில் இருந்து மீண்டு எழுந்து பார்த்தார்.
அப்போது அந்த மர்ம பெண்ணும் அவர்களுடன் இருந்த 2 பேரும் மாயமாகி உள்ளனர். மேலும் கட்டில் அடியில் வைத்திருந்த 7 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னம்மாளின் கணவர் பாலகிருஷ்ணன் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியிலும் இதே போல அந்த மர்ம பெண் தனியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியிடம் உறவினர் என்று கூறி 8 பவுன் நகை கொள்ளையடித்த சென்றுள்ளனர்.
இதே போல கலசப்பாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் துக்கம் விசாரிப்பது போல் காரில் வந்து கதறி அழுது பெண் 13 பவுன் நகையை நேற்று திருடி சென்று விட்டனர்.
இந்தப் பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த பால்வார்த்து வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37), தொழிலாளி.
இவர் தனது பைக்கில் சந்தவாசலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றார்.
அப்போது கல்வாசல் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சந்தவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
- போலீசில் புகார்
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தாய் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
இதேபோல் காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் காட்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மாணவியின் தாய் மாணவியை பள்ளியில் விட்டு சென்றார்.
பின்னர் மாணவி வீடு திரும்பவில்லை இது குறித்து மாணவியின் தாய் காட்பாடி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் சின்னகுலமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 43). எலக்ட்ரீசியன். இவருக்கு இன் னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ந் தேதி மாதவன் வேலை தொடர்பாக மோட் டார்சைக்கிளில் திருப்பத்தூ ரில் இருந்து திருவண்ணா மலை செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வெங்கடேஸ் வரா நகர் அருகே சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதையடுத்து மாதவன் நாய் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியபோது மோட்டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து, அவர் சாலையில் விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
- கடைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது அதிர்ச்சி
- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன், அரிசி வியாபாரி. இவர் தனது பைக்கில் சி.என்.ஏ. சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் எடுத்தார்.
அந்த பணத்தை தனது பைக்கில் வைத்துக்கொண்டு புறப்பட்டார். ஆற்றுமேடு பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






