என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு
- கடைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது அதிர்ச்சி
- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன், அரிசி வியாபாரி. இவர் தனது பைக்கில் சி.என்.ஏ. சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் எடுத்தார்.
அந்த பணத்தை தனது பைக்கில் வைத்துக்கொண்டு புறப்பட்டார். ஆற்றுமேடு பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
Next Story






