search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி ஆவணம்"

    • மதுரையில் போலி ஆவணம் தயார் செய்து பெண்ணிடம் நிலம் மோசடி செய்தனர்.
    • இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கர்நாடக மாநிலம் பெங்களூரு, சி.வி. ராமன் நகரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி சாந்தி ஷீலா. இவர் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகமலை புதுக்கோட்டை யில் எனது கணவர் ராஜசேகரன் மற்றும் சென்னை கொளத்துரை சேர்ந்த அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேருக்கும் 11 சென்ட் மனை மற்றும் வீடு உள்ளது.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன், அவரது மகன் ஸ்ரீதர் ஆகியோர் திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன் என்பவர் மூலம், போலி ஆவணம் தயார் செய்துள்ளனர். அதற்கான விற்பனை உரிமை, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிகுமார் என்பவருக்கு தரப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர்கள் மேலபொ ன்னகரம், சண்முகானந்தா புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் இளங்கோ பாக்யராஜ் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றுள்ளனர். இதற்கு நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நிலத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை கொளத்தூர், காவேரி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தி, இவர்களது மகன் ஸ்ரீதர், திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பழனிகுமார், நாகமலை புதுக்கோட்டை சிவபாண்டி, திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன், நாகமலை புதுக்கோட்டை ஆதிமூலம், இளங்கோ பாக்யராஜ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலியான ஆவணம் தயாரித்து வங்கியில் நகையை அபகரிக்க முயற்சி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார்.

    திருமங்கலம்

    சென்னை பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் அதியப்பன். இவரது மனைவி கனகரத்தினம் (வயது65). இவர் பார்வையற்றவர். இவருடைய சகோதரி சந்திரபிரபா. அவரது கணவர் பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரும் இறந்து விட்டனர். அவர்களுக்கு வாரிசு இல்லாததால் கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய உறவினர்கள் போலியான ஆவணம் தயாரித்து நகையை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த கனகரத்தினம் திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கனகரத்தினம் உறவினரான பாலமுருகன், அவரது மகன்கள் பிரதீப், வினித். இவர்களின் நண்பர் வினோத் ஆகிய 4 பேர் மீது திருமங்கலம் டவுன் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.36 லட்சம் மோசடி செய்த மனைவியுடன் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
    • இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இதுகுறித்து மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை பொன்மேனி பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் பாபு (வயது 46). இவர் ரெடிமேட் ஆடைகள் தொடர்புடைய வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடல்புதூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரெயிலார் காலனியை சேர்ந்த எபி ஸ்டான்லி , அவரது மனைவி சகிலா ஆகியோர் பாபுவுக்கு அறிமுகம் ஆனார்கள்.

    அப்போது ஒப்பந்த அடிப்படையில் பாபு ரெடிமேட் தொடர்பான உபபொருட்களை எபி ஸ்டான்லி-சகிலா கார்மெண்ட்ஸ் நிறுவத்திற்கு சப்ளை செய்தார். இதன் மூலம் பாபுவுக்கு அந்த தம்பதி ரூ.36 லட்சம் தர வேண்டி இருந்தது. அவர் பணத்தை பல முறை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தராமல் இழுத்தடித்தனர். இந்த நிலையில் எபி ஸ்டான்லி-சகிலா தம்பதியினர் பாபுவுக்கு பணம் கொடுத்தது போல் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.36 லட்சத்தை மோசடி செய்ய முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இதுகுறித்து மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது எபி ஸ்டான்லி-சகிலா ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ய முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    • போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த 3 பேர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இடையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் காளிமுத்து (வயது 39). இவர் வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் தனது தந்பெதையரில் உள்ள நிலத்தை போலி ஆவணங்களை தயார் செய்து பத்திர பதிவு செய்துள்ளனர் என்று புகார் செய்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின்பேரில் தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர்கள் மருது, முத்துபாலு, ராமசந்திரன், காவலர்கள் இளங்கோ, செந்தாமரைக் கண்ணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    இதில் ஆறாவயல் பெரியசாமி மகன் ராமநாதன் (32), அச்சணி பெரியசாமி மகன் கருப்பையா (65), ஊரணிக்கோட்டை பனங்குளம் வெங்கடாசலம், இடத்தை வாங்கிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பீர் முகமது மகன் நயினா முகமது, பத்திர எழுத்தாளர் அலுவலகத்தில் பணிபுரியும் மாதவன் மனைவி புவனேசுவரி, கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் கல்லல் இந்திர நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் காளிமுத்து அப்பா வெங்கடாசலம் பெயரில் உள்ள 5 ஏக்கர், 22 செண்டு நிலத்துக்கு போலி ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முதல் கட்டமாக ராமநாதன், கருப்பையா, கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்தனர்.

    • தனது ஆவணங்களைத் தவறாக பயன்படுத்தி பல கட்ட தவணைகளாக 5.7 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளது அனிதாவுக்குத் தெரியவந்தது.
    • இளம்பெண்கள் கேட்கும் போதெல்லாமல் ஹரிசங்கர் பணம் அனுப்பி வைத்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு அனுமந்தநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் ஹரிசங்கர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். அதே வங்கியில் அனிதா என்பவர் ரூ.1 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்திருந்தார்.

    மேலும், இந்த டெபாசிட் தொகையை வைத்து அவர் 75 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார். இந்த கடனுக்காக அனிதா பல்வேறு ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் தனது ஆவணங்களைத் தவறாக பயன்படுத்தி பல கட்ட தவணைகளாக 5.7 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளது அனிதாவுக்குத் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் மோசடி சம்பவங்கள் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது.

    மே மாதம் 13-ந் தேதியிலிருந்து 19-ந் தேதி வரை அனிதாவின் டெபாசிட் தொகை மூலமாக அவரது பெயரில் 5.70 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றிருப்பதும், அந்த பணம் பெங்களூருவில் உள்ள வங்கியிலிருந்து கர்நாடகத்தில் உள்ள 2 வங்கிகளுக்கும், மேற்கு வங்காளத்திலுள்ள 28 வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் வங்கி மேலாளர் ஹரிசங்கர் இந்த கையாடலில் ஈடுபட்டது உறுதியானது.

    இதுதொடா்பாக அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிசங்கரை கைது செய்துள்ளனர்.

    அவரிடம் முதலில் நடத்திய விசாரணையில், ஒரு இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்வதற்காகவும், அவர் கேட்டதால் ரூ.5.70 கோடியையும் அனுப்பி வைத்தாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில், ஹரிசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதாவது ஹரிசங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் கேரளாவில் தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். இந்த சந்தா்ப்பத்தில் டேட்டிங் செல்போன் செயலி மூலமாக முதலில் ஒரு இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்துள்ளார்.

    • போலி ஆவணம் மூலம் பத்திரம் பதிவு செய்ய முயன்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • சார் பதிவாளர் கோகிலா முன்னிலையில் ஆஜராகினர்

    திருச்சி :

    திருச்சி ஆலம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சின்னையன் மகன் கருப்பையா (வயது 35). இவர் அப்பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று மதியம் கருப்பையா மேலகல்கண்டார் கோட்டை சாமிநாதன் நகரைச் சேர்ந்த ஆரோக்கியமேரி (59) மற்றும் ராம்குமார் (41), விராலிமலை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், ஆசிர்வாதம் (51) ஆகியோர்

    திருச்சி மாவட்டம் மேக்குடி கிராமத்தில் உள்ள 4,800 சதுர அடி கொண்ட காலிமனைகளை ஆரோக்கியமேரி பெயரில் உரிமை ஆவணம் வழங்குவதற்காக கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சார் பதிவாளர் கோகிலா முன்னிலையில் ஆஜராகினர்.

    தொடர்ந்து பத்திரப் பதிவுக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது ஆரோக்கிய மேரியின் ஆதார் அட்டை போலியானது என தெரிய வந்ததைத் தொடர்ந்து மேற்கண்ட நான்கு நபர்கள் மீது கே.சாத்தனூர் சார் சார்பதிவாளர் கோகிலா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த கே.கே.நகர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆவணம் தயாரித்ததாக வழக்கறிஞர் ஒருவர் மற்றும் இதனை தாக்கல் செய்த இருவரைரிடமும் போலீசார் விசாரணை செய்ய உள்ளனர். இதனால் கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரையில் போலி ஆவணம் தயாரித்து ரூ.17.80 லட்சம் நிலமோசடி செய்யப்பட்டது.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வைத்தியநாதபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த பொன்னுசாமி மனைவி நவநீதம் (வயது 55). இவர் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், "நான் உறங்கான்பட்டியைச் சேர்ந்த பண்டாரி என்பவரிடம் ரூ.17.80 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கினேன்.

    அது வேறு ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. போலி ஆவணத்தை தயார் செய்து பண்டாரி என்னிடம் ரூ.17.80 லட்சம் நில மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×