என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து ரூ.17.80 லட்சம் நிலமோசடி
- மதுரையில் போலி ஆவணம் தயாரித்து ரூ.17.80 லட்சம் நிலமோசடி செய்யப்பட்டது.
- எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை வைத்தியநாதபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த பொன்னுசாமி மனைவி நவநீதம் (வயது 55). இவர் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், "நான் உறங்கான்பட்டியைச் சேர்ந்த பண்டாரி என்பவரிடம் ரூ.17.80 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கினேன்.
அது வேறு ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. போலி ஆவணத்தை தயார் செய்து பண்டாரி என்னிடம் ரூ.17.80 லட்சம் நில மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






