search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொழுதுபோக்கு பூங்கா"

    • எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
    • அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றி உள்ளார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பூங்கா ஊழியர்களை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவர் திடீர் என்று இறந்தார்.
    • ராசிபுரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற இடத்தில் இந்த சோகம் நிகழ்ந்தது.

    ராசிபுரம்:

    சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சர்வேஸ்வரன் (வயது 11). சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சர்வேஸ்வரன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித் தனது குடும்பத்தினருடன் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு வந்துள்ளனர். நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். குளித்துவிட்டு மேலே வந்த மாணவன் சர்வேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்தான்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் மல்லூர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சர்வேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜாம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார்.
    • சம்பவத்தை தொடர்ந்து பூங்காவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் நீர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு ஜம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார்.

    அப்போது பூங்காவில் படகு சறுக்கி விழுந்ததில் ஜானி குவைத் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், " பொழுதுபோக்கு சவாரியின் நீர் சறுக்கும் படகு ஜானியின் தலையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ள நர்சிங் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அங்கிருந்து காட்சிலா சதார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஜானி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்" என்று கூறினர்.

    சம்பவத்தை தொடர்ந்து பூங்காவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நீர் பொழுதுபோக்கு பூங்காவின் மேலாளரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளோம். அதை இயக்குவதற்கான சரியான ஆவணத்தைக் கூட நீர் பூங்கா ஆணையத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

    ×