பொழுதுபோக்கு பூங்காவில் மாணவர் திடீர் சாவு

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவர் திடீர் என்று இறந்தார்.ராசிபுரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற இடத்தில் இந்த சோகம் நிகழ்ந்தது.
பொழுதுபோக்கு பூங்காவில் மாணவர் திடீர் சாவு
Published on

ராசிபுரம்:

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சர்வேஸ்வரன் (வயது 11). சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சர்வேஸ்வரன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித் தனது குடும்பத்தினருடன் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு வந்துள்ளனர். நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். குளித்துவிட்டு மேலே வந்த மாணவன் சர்வேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்தான்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் மல்லூர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சர்வேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com