search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை"

    • காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்தனர்.
    • அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்ய ப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். காரைக்கால் இடும்பன்செட்டி சாலையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெ க்டர் புருசோத்தமன் உத்தரவின் பேரில், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பெட்டி க்கடையை சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கடை உரிமையாளர் காத்த பெருமாளை(வயது68) கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சிவகாசியில் மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை கும்பல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    விருதுநகர்

    தமிழகத்தில் புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் விற்பனையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக போதை பொருட்களை விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

    அதன்படி தென் மண்ட ல ஐ.ஜி. அஸ்ராகார்க் ஆலோசனையின் பேரில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  கஞ்சா, புகையிலை விற்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பள்ளி மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    சிவகாசி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவர் ஒருவர் அேத பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பள்ளிக்கு சரிவர செல்லாமல் தெரு சந்திப்பில் மயக்கத்துடனேயே சுற்றித் திரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்த போது, மகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.

    அதே பகுதியைச் சேர்ந்த சிலோன் ராஜா, சுருட்டை மாடசாமி, குருசாமி, பூமாரி, ஜெயராம்,  கருப்பசாமி, சிதம்பரம், சாந்தி ஆகிய 8 பேர், மாணவரை கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக்கியுள்ளனர்.  மேலும் அந்த மாணவரை பயன்படுத்தி கஞ்சா விற்றதாக சிவகாசி டவுன் போலீசில் மாணவரின் தந்தை புகார் செய்துள்ளார்.  இதன் அடிப்படையில் 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    வளர்ந்து வரும் சிவகாசி மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற சமூக விரோத கும்பல் பள்ளி-கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்று அவர்களை போதைக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன.

    எனவே இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    ×