search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து"

    • பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளன
    • பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17,18 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்து–கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    திருச்சி:

    தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.–ராஜ் மோகன் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:- தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட். பொது–மக்கள் எளி–தாக, எவ்வித சிரமமும், இடை–யூறும் இன்றி, பயணம் செய்ய ஏது–வாக சிறப்பு பேருந்து–களை இயக்குகிறது.

    அதன்படி சென்னையிலி–ருந்து கும்பகோணம், தஞ்சா–வூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங் கண்ணி, மயிலாடு–துறை, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் 12.01.2023, 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களிலும் மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய ஊர்க–ளுக்கும் மற்றும் கும்பகோ–ணம் போக்குவரத்துக்கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரை–யும், அனைத்து முக்கிய நகரங்க–ளிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொது–மக்கள் எளிதாக பய–ணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சா–வூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி, அரிய–லூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத் துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலை–வர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

    மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16.01.2023, 17.01.2023 மற்றும் 18.01.2023 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்து–கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ப–தையும் மகிழ்வுடன் தெரி–வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.


    • பெத்துபட்டியிலிருந்து சின்ன சேலம் வழியாக துறையூர் வரையிலான வழித்தடத்தில் புதிய பேருந்து வசதியினை துவக்கி வைத்தார்
    • பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பஸ் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தனர்

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியை சேர்ந்த வைகறை, கங்காணிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பஸ் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக தங்கள் பகுதிக்கு பஸ் வசதியினை ஏற்பாடு செய்து தரக் கோரி துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ. பொதுமக்களின் வேண்டுகோளின் படி காலை, மாலை ஆகிய இரு வேலைகளிலும் துறையூரிலிருந்து கலிங்கமுடையான்பட்டி, மெய்யம்பட்டி வழியாக கங்காணிப்பட்டி வரையிலான புதிய பேருந்து வசதியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஷ்டம்ஸ் மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, கிளைச் செயலாளர் முத்துசாமி, இளைஞர் அணி அருண், தொ.மு. சங்கத்தை சேர்ந்த சுப்பையா, ராஜூ மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இதே போன்று பெத்துபட்டியிலிருந்து சின்ன சேலம் வழியாக துறையூர் வரையிலான வழித்தடத்தில் புதிய பேருந்து வசதியினை எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.
    • கண்டக்டர் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

    விழுப்புரம் :

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது. வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை சிரமப்பட்டு இறக்க முயன்றார். ஆனால் அவர் இறங்காமல் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி நின்றார். அப்போது கண்டக்டர் பிரகாஷ் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் சாலையில் விழுந்தார். பின்னர் அந்த பஸ், வந்தவாசி போக்குவரத்து பணிமனைக்கு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில், அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதுபற்றி அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அதிகாரி விசாரணை மேற்கொண்டு, பஸ்சில் இருந்து பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிட்டதாக கண்டக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • போக்குவரத்து துறை அமைச்சரிடம் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியோர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பேருந்துகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியோர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக சட்டமன்ற அலுவலகத்திற்கு அதிகமான மனுக்கள் வந்துள்ளதாலும், பொதுமக்கள் பலமுறை நேரில் சந்தித்து என்னிடம் கோரிக்கை வைத்துள்ளதாலும் கீழ்கண்ட வழித்தடங்களில் இயங்கி கொண்டிருந்த பேருந்துகளை மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்கி தந்து உதவுமாறு அமைச்சரை கேட்டு கொள்கிறேன்.

    கருங்கலில் இருந்து கருமாவிளை, திக்கணங்கோடு, திங்கள் நகர், இரணியல், வழித்தடத்தில் நாகர்கோவிலுக்கு செல்லும் பாயிண்டு டூ பாயிண்டு முழுநேர பேருந்து, மற்றும் புதுக்கடை, சடையன்குழி, கிள்ளியூர், தொலையாவட்டம், பாலூர், கருங்கல், கருமாவிளை, கருக்குப்பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, பாளையம், திங்கள்நகர் வழியாக தக்கலை செல்லும் தடம் எண் 10 C - புதுக்கடை - தக்கலை முழுநேர பேருந்து மற்றும் வடசேரி, பார்வதிபுரம், சுங்கான்கடை, பரசேரி, இரணியல், திங்கள்நகர், திக்கணங்கோடு, மத்திகோடு, கருங்கல், இனையம்புத்தன்துறை, இனையம், ஹெலன் நகர் வழியாக ராமன்துறை செல்லும் தடம் எண் 309 E மற்றும் 309 E, F.P - நாகர்கோவில் - ராமன்துறை முழுநேர பேருந்து, மற்றும் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, குருந்தன்கோடு, இரணியல், திங்கள்நகர், பாளையம், திக்கணங்கோடு, மத்திகோடு, கருங்கல், மிடாலக்காடு வழியாக மிடாலம் செல்லும் தடம் எண் 7 J - நாகர்கோவில் - மிடாலம் பேருந்து, குளச்சல், பாலப்பள்ளம், கருங்கல், பாலூர், கம்பிளார், வேங்கோடு, புதுக்கடை, நித்திரவிளை வழியாக நீரோடி காலனி செல்லும் தடம் எண் 302 A - குளச்சல் - நீரோடி பேருந்து, கருங்கலில் இருந்து

    பாலூர், தெருவுக்கடை, தொழிக்கோடு, செந்தறை, பரவை, பொத்தியான்விளை, வில்லாரிவிளை, கீழ்குளம், தேங்காப்பட்டணம், புதுக்கடை, காப்பிக்காடு வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87B - மார்த்தாண்டம் - கருங்கல் பேருந்தை ஒரே வழித்தடத்தில் முழுநேர பேருந்தாக இயக்க வேண்டும். இனையம் முதல் தேங்காப்பட்டணம் வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87A - பேருந்தை இனையத்திலிருந்து உடவிளை, ஈத்தன்காடு, செந்தறை, தொழிக்கோடு, தெருவுக்கடை வழியாக கருங்கல் வரை பொதுமக்கள் நலன் கருதி நீட்டிப்பு செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்து இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து சென்றால் அபராதம் வசூலிப்பது வழக்கம்.
    • அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய சோதனையில் சுமார் 170 ஆண்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓடும் நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் அமர்ந்து சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து கழக ஊழியர்கள், நடத்திய சோதனையில் 170 ஆண்கள் பல்வேறு நகர பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து பயணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணிகளிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பி.எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×